Nov 16, 2025 - 06:42 PM -
0
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 211 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Sadeera Samarawickrama அதிகபட்சமாக 48 ஓட்டங்களையும், அணித்தலைவர் Kusal Mendis 34 ஓட்டங்களையும், Pavan Rathnayake 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Mohammad Wasim 03 விக்கெட்டுக்களையும், Haris Rauf மற்றும் Faisal Akram ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன்படி பாகிஸ்தான் அணிக்கு 212 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

