Nov 16, 2025 - 07:15 PM -
0
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பல்காரில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் 6ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவர், ஆசிரியை அளித்த தண்டனையால் உயிரிழந்தார்.
பாடசாலைக்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்த காரணத்திற்காகவே அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியை தண்டனையாக, புத்தக பையுடன் மாணவியை தொடர்ந்து 100 முறை உட்கார்ந்து எழும்புமாறு (Sit-ups) உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தண்டனைக்குப் பிறகு மாணவிக்கு கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டதால், அவர் மும்பையில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த மாணவி ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், அதைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாமல் தண்டனை வழங்கியதாலேயே அவரது உடல்நிலை மோசமடைந்து மரணம் நேரிட்டதாகவும் மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

