Nov 17, 2025 - 07:49 AM -
0
இந்தியாவின் புதுடெல்லியில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார், குறித்த சந்தேகநபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காஷ்மீரைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 73 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இந்தியாவின் டெல்லியில் இடம்பெற்ற இந்த கார் குண்டுத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 20 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

