Nov 17, 2025 - 08:42 AM -
0
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள கலண்டோ செம்பு சுரங்கத்தில் பாலம் ஒன்று கூட்ட நெரிசல் காரணமாக இடிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்தனர்.
கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் தொடர்பான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட இடத்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளம் நிறைந்த பள்ளத்தை கடக்க அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் மீது சுரங்கத் தொழிலாளர்கள் அவசரமாக ஓடியதாலேயே அது இடிந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பீதியடைந்த சுரங்க தொழிலாளர்கள் பாலத்தில் ஓடியபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
32 பேர் இறந்ததாக கூறப்பட்டாலும் உண்மையான இறப்பு எண்ணிக்கை 40-யை தாண்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மின்சார வாகனங்கள் மற்றும் பிற பொருட்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோபால்ட் கனிமத்தை சுரங்கங்களில் இருந்து அதிக அளவில் காங்கோ உற்பத்தி செய்கிறது.

