Nov 17, 2025 - 10:42 AM -
0
நெஷனல் டெவெலொப்மெண்ட் வங்கியானது (NDB) இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) ஏற்பாடு செய்த மதிப்புமிக்க தேசிய விற்பனை விருதுகள் 2025 இல்,வங்கிப்பிரிவில் மீண்டும் ஒருமுறை விற்பனை செயல்திறன் மற்றும் சேவைத் தலைமைத்துவத்தில் தனது சிறப்பினை நிரூபித்துள்ளது. இந்த நிகழ்வானது இலங்கையின் மிகவும் ஆற்றல் வாய்ந்த விற்பனை நிபுணர்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரித்ததுடன் மேலும் NDB இன் வெற்றியானது வங்கியின் நிலையான செயல்திறனிற்கான சிறந்த பயணத்தில் மற்றொரு மைல்கல்லை குறிப்பதாக அமைந்திருந்தது.
NDB வங்கியானது தனது திறமையான விற்பனைக்குழுவின் வலிமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், வங்கித் துறையில் வெற்றி பெற்று, தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் தகுதி விருதுகளைப் பெற்றது. விற்பனை அதிகாரி - வங்கி பிரிவில் சந்துனி மகேஷிகா தங்க விருதைப் பெற்றார், அதே வேளை ரஜந்த சந்துல அதே பிரிவில் வெள்ளி விருதைப் பெற்றார். விதிவிலக்கான சேவை மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில், சஷினி ஹன்சிகா முன்கள ஊழியர் - வங்கிப் பிரிவில் வெள்ளி விருதைப் பெற்றார்.
தலைமைத்துவம் மற்றும் பிராந்திய முகாமைத்துவத்தினை அங்கீகரிக்கும் விதமாக, நிரோஷன் கமகே மற்றும் கிரேஷன் பெரேரா முறையே பிரதேச முகாமையாளர் - வங்கிபிரிவு மற்றும் விற்பனை, மேற்பார்வையாளர் - வங்கிப் பிரிவு ஆகியவற்றில் வெண்கல விருதுகளைப் பெற்றனர். வங்கியின் ஈர்க்கக்கூடிய வெற்றியாளர்களின் வரிசையை நிறைவு செய்யும் வகையில், லக்னி ராஜபக்ஷ முன்னணி வரிசை - வங்கிப் பிரிவில் தகுதிகாண் விருதையும், கவீஷா வீரசிங்க வங்கிப் பிரிவில் விற்பனை மேற்பார்வையாளருக்கான தகுதிகாண் விருதையும் வென்றனர்.
இந்த சாதனைகள் சேவை சிறப்பு, தொழில்முறை மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட புத்தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்திறன் சார்ந்த கலாசாரத்தை வளர்ப்பதில் NDB இன் தொடர்ச்சியான முதலீட்டை எடுத்துக்காட்டுகின்றன. அனைத்து விருதுகளும் வங்கியின் வலுவான இருப்பு, ஒவ்வொரு வாடிக்கையாளர் தொடர்புகளிலும் NDB இன் மதிப்புகளைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் அதன் குழுக்களின் கூட்டு அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஆர்வம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும்.
இந்த சாதனைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த தனிநபர் வங்கிப்பிரிவு மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்திற்கான சிரேஷ்ட துணைத் தலைவர் சஞ்சய பெரேரா, “இந்த ஆண்டு தேசிய விற்பனை விருதுகளில் எமது குழுவின் விதிவிலக்கான செயல்திறனைப் பற்றி நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த அங்கீகாரங்கள் தனிப்பட்ட சிறப்பிற்கு மட்டுமல்லாது, எமது மக்களை மேம்படுத்துவதற்கும், வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்துவதற்கும், வங்கித் துறையில் விற்பனை மற்றும் சேவை சிறப்பிற்கான புதிய அளவுகோல்களை அமைப்பதற்கும் NDB இன் கூட்டு அர்ப்பணிப்புக்கும் ஒரு சான்றாகும்” என்றார்.
SLIM ஆல் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் தேசிய விற்பனை விருதுகள், பல்வேறு துறைகளில் இலங்கையின் சிறந்த செயல்திறன் கொண்ட விற்பனை நிபுணர்களை அங்கீகரித்து கொண்டாடுகின்றன. இந்த மதிப்புமிக்க தளத்தில் NDB இன் நிலையான வெற்றி, திறமையை மதிக்கும், தொழில் வளர்ச்சியை வளர்க்கும் மற்றும் நிதி சேவைகளில் சிறந்து விளங்கும் ஒரு முன்னணி நிறுவனமாக அதன் நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
NDB தனது வளர்ச்சிப் பயணத்தைத் தொடர்ந்து துரிதப்படுத்தும் வேளையில், இந்த வெற்றிகள், உயர் செயல்திறன் கொண்ட ஊழியர்களை உருவாக்குவதற்கும், ஒப்பிடமுடியாத வாடிக்கையாளர் அனுபவங்களை வழங்குவதற்கும், புத்தாக்கம், சேவை மற்றும் ஒருமைப்பாடு மூலம் இலங்கையின் நிதித் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் வங்கியின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
இலங்கையில் பட்டியலிடப்பட்ட நான்காவது பெரிய வணிக வங்கி NDB வங்கியாகும். 2025 ஆம் ஆண்டுக்கான யூரோமணி விருதுகளுக்கான சிறப்பு விருதுகளில், SME-களுக்கான இலங்கையின் சிறந்த டிஜிட்டல் வங்கியாக NDB பெயரிடப்பட்டது, மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிய வங்கி மற்றும் நிதி இதழ் (சிங்கப்பூர்) விருதுகளால் ஆண்டின் உள்நாட்டு சில்லறை வங்கி - இலங்கை மற்றும் இலங்கை உள்நாட்டு திட்ட நிதி வங்கி விருதை வென்றது. NDBஆனது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும், இதில் மூலதன சந்தை துணை நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து ஒரு தனித்துவமான வங்கி மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகின்றன. டிஜிட்டல் வங்கி தீர்வுகளால் இயக்கப்படும் அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்த வங்கி உறுதிபூண்டுள்ளது.

