Nov 17, 2025 - 01:30 PM -
0
நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் பெண் பிரதிநிதிகளுக்கு டிஜிட்டல் அறிவினை மேம்படுத்துவதற்காகவும், ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பான பயிற்சி வழங்கும் 'ஜனனி' வேலைத்திட்டம் நுவரெலியாவில் நேற்று (16) நடைபெற்றது.
இதில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலின் போது பெண்கள் எவ்வாறு ஊடக நெறிமுறையில் வித்தியசமான அணுகுமுறைகளைக் கையாளுதல், நெறிமுறையைப் பின்பற்றுவதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பின் விரைவாக பேசப்பட்டு இது சம்பந்தப்பட்ட காணொளி காட்சி மூலம் டிஜிட்டல் திரையில் காண்பிக்கப்பட்டு சிறப்பு வளவாளரால் விளக்கமளிக்கப்பட்டது.
கெப்பே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சி திட்டத்தின் டிஜிட்டல் அறிவினை மேம்படுத்துவதற்காகவும், ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பான விடயங்கள் பங்குபற்றுனர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அவை குறித்து விரிவாகப் பேசப்பட்ட சிறப்பான ஊடக நெறிமுறை தொடர்பான பயிற்சி பட்டறையாக இது அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் தேர்தல் காலங்களில் ஊடகவியலாளர்கள் மூலம் கேட்கும் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டு ஊடகங்களுக்கு முன் பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
இதில் கெப்பே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன், ஐரஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, கெப்பே அமைப்பின் கணக்காளர் மாலக்க வித்தாநாயக்க நுவரெலியா மாவட்ட கெப்பே அமைப்பின் அமைப்பாளர் அகில்ராஜ் மற்றும் நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
--

