Nov 17, 2025 - 02:07 PM -
0
சர்வதேச மென்பொருள் வடிவமைப்பு பொறியியல் நிறுவனமான 99x கொழும்பிலுள்ள சினமன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த பிரத்தியேக ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வில் Agentic AI தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதற்கான தனது பிந்தைய புத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நிறுவனத்தின் குறிக்கோள் புதிய சந்தைகள் மத்தியில் அதன் மூலோபாய விரிவாக்கம் செயற்கை நுண்ணறிவால் முன்னெடுக்கப்படுகின்ற புத்தாக்கத்தின் மையமாக இலங்கையை நிலைநிறுத்தும் அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியவை குறித்து கலந்துரையாடுவதற்காக 99x நிறுவனத்தின் சர்வதேச தலைமைத்துவ அணியினர் மற்றும் ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் ஒன்றுகூடியிருந்தனர்.
99x Asia ன் ஸ்தாபகரும் தலைவருமான மனோ சேகரம் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான ஓட்- ஸ்வியர் ஒஸ்லி 99x Norway குழும பிரதம நிதி அதிகாரி ட்ரைக்வே மோ பிரதம நிறைவேற்று அதிகாரி ஹசித் யக்கஹவிட்ட பிரதம செயல்பாட்டு அதிகாரி ஷஹானி செனவிரத்ன மற்றும் 99x Product Engineering பிரதம செயற்கை நுண்ணறிவு அதிகாரி சத்துர டி சில்வா உள்ளிட்ட 99x நிறுவன தலைமைத்துவ அணியின் முக்கிய உறுப்பினர்கள் இந்த அறிமுக நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
99x Product Engineering பிரதம நிறைவேற்று அதிகாரி ஹசித் யக்கஹவிட்ட அவர்கள் நிகழ்வின் ஆரம்பத்தில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் துறையில் 99x நிறுவனத்தின் இலட்சியம் மற்றும் அபிலாஷகளை வெளிப்படுத்தினார். 99x Product Engineering அணிகள் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு சிறப்பாக உள்வாங்கிக் கொண்டுள்ளன என்பதையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கு இடமளிக்கும் வகையில் தமது தயாரிப்பு வடிவமைப்புக்களை முன்னெடுப்பதில் எவ்வாறு பல்வேறு வாடிக்கையாளர்களுடன் இணைந்து அவர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பதையும் அவர் விளக்கினார். 99x நிறுவனத்தின் சொந்த முகவர் ஏற்பாட்டுத் (agentic orchestrator) தளமான Agentri AI ன் அறிமுகம் இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமையப்பெற்றது. பல்வேறு தொழில்துறைகள் மத்தியில் தமது வாடிக்கையாளர்கள் தமது வியாபார நடைமுறைகளை பரிணமிக்கச் செய்வதற்கு Agentri தளம் எவ்வாறு இடமளித்துள்ளது என்ற விபரங்களையும் ஹசித் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
ஹசித் அவர்கள் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில், 'உருவாக்க செயற்கை நுண்ணறிவு (Generative AI) என்பது பாரியதொரு மேம்பாடாக அமைந்தாலும் சிக்கலான வியாபாரச் சவால்களுக்கு தீர்வு காண்பதில் பல்வேறு செயற்கை நுண்ணறிவு முகவர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவதே உண்மையான மாற்றத்திற்கு வழிவகுக்கின்றது. இதனை மேற்கொள்ள Agentri உதவுவதுடன் பொறியியல் மகத்துவம் படைப்பாற்றல் மற்றும் மனித நுண்ணறிவை ஒருங்கிணைக்கின்றது. உண்மையில் வலிமைமிக்க ஒன்றை கட்டியெழுப்ப எண்ணியமையால் எமக்குச் சொந்தமான முகவர் ஏற்பாட்டுத் தளத்தை நாம் வடிவமைத்துள்ளதுடன் உலகெங்கிலுமுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு உண்மையான நற்பலனை அது தற்போது வழங்கி வருகின்றது'.
கடந்த ஆண்டில் நிதியியல் சேவைகள் சட்டம் காப்புறுதி போக்குவரத்து மற்றும் கணக்கியல் போன்ற துறைகள் மத்தியில் உயர் விளைவுகளை ஏற்படுத்தவல்ல அமுலாக்கங்களுக்கு 99x ன் முகவர் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பு வலுவூட்டியுள்ளதுடன் வெளிப்படையான மதிப்பை வழங்கி வியாபாரத்தின் பெறுபேறுகளை விரைவுபடுத்தியுள்ளது. இதன் வெற்றியானது மென்பொருள் வடிவமைப்பு பொறியியல் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் ஆகியவற்றின் நம்பிக்கைக்குரிய உலகளாவிய கூட்டாளர் என்ற 99x ன் நன்மதிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
99x ன் உலகளாவிய செயற்பாடு குறித்து 99x Norway குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான ஓட்- ஸ்வியர் ஒஸ்லி அவர்கள் கருத்து வெளியிடுகையில் ஐரோப்பா வட மற்றும் தென் அமெரிக்கா மற்றும் ஆசியா பிராந்தியங்கள் மத்தியில் நிறுவனத்தின் சீரான விரிவாக்கம் குறித்து விளக்கினார். 'கடந்த ஆண்டில் நாம் அடையப்பெற்றுள்ள வளர்ச்சி நோக்கம் சார்ந்தது என்பதுடன் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தினூடாக எமது வாடிக்கையாளர்கள் வெற்றி காண்பதற்கு உதவும் ஆழமான நோக்கம் ஆகியவற்றை அத்திவாரமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐரோப்பாவில் உச்சச் செயல்திறன் கொண்ட நிறுவனங்கள் பலவற்றை நாம் கையகப்படுத்தியுள்ளதுடன் மேலும் பல நிறுவனங்களுடன் கூட்டிணைவது மற்றும் கையகப்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். நாம் அண்மையில் அவ்வாறு கையகப்படுத்தியுள்ள வணிகங்களில் Solvr மற்றும் Clave (இரண்டும் நோர்வேயைச் சேர்ந்தவை) மற்றும் போலந்திலுள்ள Fabres நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியமை ஆகியன குறிப்பிடத்தக்கவை. உயர் மதிப்புமிக்க நீண்ட கால அடிப்படையிலான கூட்டாளராக மாறி நாம் இயங்கி வருகின்ற புவியியல் பிராந்தியங்கள் எங்கும் மிகச் சிறந்த தொழில்நுட்ப திறமைசாலிகளை ஈர்க்க வேண்டும் என்பதே எமது இலட்சியம்'.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பில் கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப திறமைசாலிகள் மற்றும் இலங்கை தொழில் வல்லுனர்களுக்கு இதன் மூலமாக கிடைக்கப்பெறும் அதிகரித்த அளவிலான வாய்ப்புக்கள் குறித்து இக்கலந்துரையாடல்களின் போது ஆராயப்பட்டது. 99x Product Engineering பிரதம செயல்பாட்டு அதிகாரி ஷஹானி செனவிரத்ன அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் 'செயற்கை நுண்ணறிவு மற்றும் மென்பொருள் வடிவமைப்பு பொறியியல் சார்ந்த திறமைசாலிகளுக்கான கேள்வி விரைவாக அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனுடன் இணைந்ததாக செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் பாவனை மூலமாக உற்பத்தித்திறன் மற்றும் தரமான பணி ஆகியவற்றை அதிகரிப்பதில் கைதேர்ந்த பொறியியலாளர்களுக்கான கேள்வியும் அதிகரித்து வருகின்றது. எமது வாடிக்கையாளர்கள் மிகவும் குறுகிய கால அவகாசத்தில் தமக்கு வேண்டிய வடிவமைப்புக்களை எதிர்பார்க்கின்ற நிலையில் செயற்கை நுண்ணறிவு கருவிகளை திறன்மிக்க வழியில் பயன்படுத்துவதனூடாக மாத்திரமே அத்தகைய குறுகிய கால அவகாசங்களில் அவற்றை நம்மால் வழங்க முடியும். உள்நாட்டைப் பொறுத்தவரையில்ரூபவ் தொழில்துறை அமர்வுகளை ஏற்பாடு செய்தும் மாணவர்களுக்கு வழிகாட்டியும் மற்றும் hackathon நிகழ்வுகளை நடாத்தியும் பல்கலைக்கழகங்களுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம்'.
நிகழ்வின் நிறைவாக கருத்துக்களைப் பரிமாறும் குழுநிலை கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் முகவர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம்ரூபவ் 99x புத்தாக்க திட்டம் இலங்கையில் செயற்கை நுண்ணறிவின் அடுத்த தலைமுறை திறமைசாலிகளை வளர்ப்பதில் அது தொடர்ச்சியாக செலுத்தி வரும் கவனம் ஆகியன குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டுத் தெளிவுபெற்றனர். ஐரோப்பிய மென்பொருள் வடிவமைப்பு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கான டிஜிட்டல் தயாரிப்புக்கள் மற்றும் தளங்களைக் கட்டமைத்து உலகளாவில் தொழில்நுட்ப முன்னோடி நிறுவனம் என்ற தனது ஸ்தானத்தை Agentri AI மூலமாக மீண்டும் 99x உறுதிப்படுத்தியுள்ளது.
99x தொடர்பான விபரங்கள்
இலங்கையில் தனது ஆணிவேர்களுடன் நோர்வே நாட்டில் தனது தலைமையகத்தைக் கொண்டுள்ள 99x ஆனது டிஜிட்டல் தயாரிப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளில் சர்வதேச அளவில் முன்னிலை வகித்து வருவதுடன் இலங்கை பிரேசில் நோர்வே போர்த்துக்கல் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் வடிவமைப்பு வல்லுனர்கள் அணியைக் கொண்டுள்ளது.
2004 ம் ஆண்டு முதல் முன்னிலை வகிக்கும் சுயாதீன மென்பொருள் வழங்குனர்களுடனான (Independent Software Vendors - ISV) ஒத்துழைப்புக்கள் மூலமாக வடிவமைக்கப்பட்ட 150 க்கும் மேற்பட்ட மிகச் சிறந்த டிஜிட்டல் தீர்வுகளை வழங்கியுள்ளது. புத்தாக்கம் ஒத்துழைப்பு மற்றும் பொறியியல் மகத்துவம் ஆகியவற்றினூடாக வணிகங்கள் தமது டிஜிட்டல் சார்ந்த எதிர்காலங்களை மீள்கற்பனை செய்வதற்கு 99x தொடர்ந்தும் உதவி வருகின்றது.

