Nov 17, 2025 - 02:48 PM -
0
Lanka Milk Foods (CWE) PLC (LMF) நிறுவனம் ஆறு தசாப்த காலத்திற்கும் மேலாக, இலங்கையின் பாலுற்பத்தித் துறையில் நம்பிக்கை, தரம், மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் தனித்துவம்மிக்க நாமமாகத் திகழ்ந்து வருகின்றது. குடும்பங்கள் மத்தியில் போசாக்கினை வழங்குவதற்கும் அப்பாற்பட்ட ஒரு தயாரிப்பான “சுத்தி” என்ற புத்தம்புதிய பால் வர்த்தகநாமத்தை அறிமுகம் செய்து வைக்கின்றமை குறித்து அந்நிறுவனம் இன்று பெருமையுடன் அறிவித்துள்ளது. நாட்டில் பாலுற்பத்தித் துறையை வலுப்படுத்துவதிலும், உள்ளூர் பாலுற்பத்தியாளர்களின் ஜீவனோபாயங்களை மேம்படுத்துவதிலும் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பை இது குறித்து நிற்பதுடன், வளர்ச்சியின் பலாபலன்கள் சமூகத்தில் அனைவர் மத்தியிலும் பகிரப்படுவதையும் இது உறுதி செய்கின்றது.
சுத்தி என்பது புத்தம்புதிய பால் என்பதற்கும் அப்பாற்பட்டது. இலங்கையில் பாலுற்பத்தியாளர்களுக்கு வலுவூட்டி, பாலுற்பத்தியில் தேசம் தன்னிறைவு காண்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதில் LMF ன் நம்பிக்கையின் வடிவமாகும். உள்ளூர் பாலுற்பத்தியாளர்களுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவதனூடாக, சுத்தி பாலின் ஒவ்வொரு துளியும் தரம், பாதுகாப்பு, மற்றும் நிலைபேற்றியல் ஆகியவற்றின் விழுமியங்களைச் சுமப்பதை LMF உறுதி செய்கின்றது. நம்பிக்கைமிக்கது என்பதற்கேற்றவாறு ஊட்டச்சத்தை வழங்கி வளப்படுத்தும் தயாரிப்பு என்ற வாக்குறுதியை இது நுகர்வோருக்கு அளிப்பதுடன், இலங்கையின் கிராமப்புற பொருளாதாரத்தின் இதயத்துடிப்புக்கு ஆதரவளிக்கும் அதேசமயம், குடும்பங்கள் செழிக்க உதவுகின்ற புத்தம்புதிய பால் தயாரிப்பாகும்.
சுத்தியின் அறிமுகமானது LMF ன் 60 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்தில் பெருமைமிக்க சாதனை மைல்கல்லாக மாறியுள்ளது. புத்தாக்கங்களில் முன்னோடி மற்றும் அதியுயர் தரம் கொண்ட பாற்பொருட்களை வழங்குவதற்கு பெயர்பெற்று விளங்கும் LMF, அதன் செழுமைமிக்க பாரம்பரியம் மற்றும் முற்போக்கான சிந்தனை கொண்ட இலட்சியம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, குறித்த நோக்கத்துடன் தொடர்ந்தும் சிறப்பாகப் பயணித்து வருகின்றது. பொறுப்புணர்வுமிக்க வழிமுறையில் பாலுற்பத்தி நடைமுறைகள் மற்றும் நிலைபேற்றியல் சார்ந்த முறையில் கொள்வனவுகளை மேற்கொள்ளல் ஆகியவற்றினூடாக, ஆரோக்கியமான குடும்பங்களை வளர்ப்பது மாத்திரமன்றி, தேசத்தின் பாலுற்பத்தித் துறையின் நீண்ட கால வளர்ச்சிக்கும் இந்நிறுவனம் பங்களிப்பாற்றி வருகின்றது.
சுத்தி புத்தம்புதிய பால் தயாரிப்புடன், இலங்கையை வளப்படுத்தும் அதேசமயம், இத்துறையின் முதுகெலும்பாகவுள்ள சமூகங்களுக்கு வலுவூட்டும் தனது இலக்கினை LMF மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது தேசத்தின் பெருமையின் கொண்டாட்டம், பகிரப்பட்ட முன்னேற்றத்தின் அடையாளம், இலங்கையில் மிகவும் நம்பிக்கைக்குரிய பாலுற்பத்தி வர்த்தகநாமங்களில் ஒன்றின் பாரம்பரியத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் மகத்துவத்தின் புத்தம்புதிய வாக்குறுதி.

