Nov 17, 2025 - 04:50 PM -
0
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து வௌியிட்டுள்ள அறிக்கையில், தனக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
"எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்," என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்களைக் கொல்ல தான் உத்தரவிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
"நீதிமன்றத்தில் எனக்கு நியாயமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை," என நீதிமன்ற நடவடிக்கைகளைக் குறை கூறியுள்ளார்.
தனக்கு எதிரான தீர்ப்பு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை என்றும் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் ஆட்சிக்கு வந்த டாக்டர் யூனுஸ், "தீவிரவாத சக்திகளின் ஆதரவுடன்" ஆட்சிக்கு வந்ததாகவும் ஷேக் ஹசீனா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அறிக்கை, பங்களாதேஷின் அரசியல் நிலைமை மற்றும் ஷேக் ஹசீனாவின் மீதான வழக்குகள் குறித்த முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.

