வடக்கு
ராமநாதபுரம் கடற்கரையோர பகுதிகளில் உலா வரும் டொல்பின்கள்

Nov 18, 2025 - 10:15 AM -

0

ராமநாதபுரம் கடற்கரையோர பகுதிகளில் உலா வரும் டொல்பின்கள்

மன்னார், இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு சென்ற நிலையில் இன்று (18) காலை முதல் குறித்த டொல்பின் கூட்டம் கூட்டம் கூட்டமாக கரையோர பகுதிகளில் துள்ளி குதித்து விளையாடி வருகிறது. 

இந்த அற்புதமான காட்சி அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது. 

பொதுவாக அரிதாகவே நிகழும் இத்தகைய நிகழ்வு, இன்று பல டால்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்துவது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இந்த அரிய காட்சியை அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர். 

இத்தகைய ஒரு நிகழ்வு, அதாவது இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான டொல்பின்கள் ஒரே நேரத்தில் கடலோர பகுதிக்கு வந்து துள்ளி குதிப்பது, இதுவே முதல்முறை என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர். 

இந்த இயற்கை நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05