Nov 18, 2025 - 02:39 PM -
0
இலங்கையில் கடந்த 3 நாட்களுக்குள் யாழ்ப்பாணத்தில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சியாக 160.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 3 நாட்களாக யாழ். மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக 10 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 5 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.
பகல் வேளைகளில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர் என தெரிவித்தனர்.
--

