Nov 18, 2025 - 04:15 PM -
0
ஜனநாயகக் குடியரசு கொங்கோ நாட்டின் சுரங்கத்துறை அமைச்சர் லூயிஸ் வட்டும் கபாம்பா உள்ளிட்ட சுமார் 20 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொல்வேசி விமான நிலையத்தில் (Kolwezi) தரையிறங்கும் போது, விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி தீப்பற்றுதலுக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், உடனடியாக செயற்பட்ட விமான நிலைய தீயணைப்பு படையினர், விமானத்தில் இருந்த அமைச்சர் மற்றும் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் எவருக்கும் எவ்வித காயமோ, உயிராபத்தோ ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

