Nov 19, 2025 - 06:58 PM -
0
தலவாக்கலை பாரதி மகா வித்யாலயத்தின் உயர்தர வர்த்தக பிரிவில் கல்வி பயிலும் 23 மாணவர்களுக்கு Scientific Calculators அன்பளிப்பு செய்யப்பட்டது.
நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமாரின் தனிப்பட்ட நிதி உதவியில் இந்த Scientific Calculators வழங்கப்பட்டது.
மலையக மாணவர்களின் கல்வித் துறை மேம்படுவதற்காக கடந்த பல வருடங்களாக தனது சொந்த நிதியை பயன்படுத்தி பல்வேறு உதவித் திட்டங்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் முன்னெடுத்து வருகின்றார்.
அதன் ஒரு அங்கமாக 23 கல்குலேட்டர்களை தலவாக்கலை பாரதி மகா வித்தியாலய வர்த்தக பிரிவு மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
பாடசாலையின் அதிபர் நல்லமுத்து விஜயகுமாரன் அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பாடசாலையின் உதவி அதிபர் கவிதா, உயர்தர பகுதி தலைவர் ஜெயலலிதா, தகவல் தொழில்நுட்ப பாட ஆசிரியை கமலேஸ்வரி, ஆசிரியர் சுரேன் ஆகியோருடன் உயர்தர மாணவர்களும் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வின்போது உரை நிகழ்த்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார்,
எமது சமூகம் எதிர்காலத்தில் கல்வித் துறையில் மாத்திரமல்லாது அனைத்து துறைகளிலும் பிரகாசிக்க வேண்டும் என்றும் பல்வேறு சிக்கல்கள் சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்கும் எமது மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அரசியல் கடந்து தான் தயார். கடந்த காலங்களில் மாத்திரமல்லாது தற்போதும் மலையக கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தனது சொந்த நிதியிலிருந்து செய்து வருவதாக தெரிவித்தார்.

