இந்தியா
தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் இந்திய பிரதமர்!

Nov 21, 2025 - 07:47 AM -

0

தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் இந்திய பிரதமர்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். 

ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. 

இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே இந்தி பிரதமர் மோடி இன்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். 

உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் இந்திய பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். 

குறிப்பாக ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் இந்திய பிரதமர் நடத்துகிறார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05