Nov 21, 2025 - 10:55 AM -
0
செலான் வங்கி பிஎல்சி தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக Colombo Motor Showவின் உத்தியோகபூர்வ வங்கி மற்றும் லீசிங் பங்காளராக மீண்டும் கைகோர்த்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய சர்வதேச மோட்டார் மற்றும் மோட்டார் பாகங்கள் கண்காட்சியுடனான தனது நீண்டகால தொடர்பை நீடிப்பதில் வங்கி பெருமையடைகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வான Colombo Motor Show 2025, நவம்பர் மாதம் 21, 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும்.
இலங்கையின் மிக முக்கிய வாகன கண்காட்சிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந் நிகழ்வில் சமீபத்திய மோட்டார் வாகனங்கள், accessories, உதிரிப் பாகங்கள், டயர்கள், பட்டரிகள் மற்றும் பிற துணை சேவைகளை காட்சிப்படுத்தும் 200க்கும் மேற்பட்ட வர்த்தக காட்சிக்கூடங்கள் இடம்பெறும். Asia Exhibition and Conventions (Pvt) Ltdaஆல் தொடர்ந்து 19ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கண்காட்சி, வாகன ஆர்வலர்கள் மற்றும் வாகனக் கொள்வனவில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களிற்கு தமது வாகனத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சிறந்த தளமாக இருக்கும்.
உத்தியோகபூர்வ வங்கி மற்றும் லீசிங் பங்காளராக செலான் வங்கி, கண்காட்சி வளாகத்தில் பார்வையாளர்களுக்கு பரந்த வங்கிச் சேவைகளை வழங்கவுள்ளது. இது on-site லீசிங் மதிப்பீடுகள், செயலாக்க கட்டணங்களில் சிறப்பு சலுகைகள் மற்றும் சிறப்பு வட்டி வீதங்களை உள்ளடக்கிய கவர்ச்சிகரமான லீசிங் வசதிகளை கொண்டிருக்கும். மேலும் செலான் வங்கி கடனட்டை தீர்வுகள், நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிதி நிர்வாகத்தை இலகுவாக்க என வடிவமைக்கப்பட்ட பல்வேறு டிஜிட்டல் வங்கி சேவைகளை வழங்க எண்ணியுள்ளது.
“Colombo Motor Show உடனான எங்கள் இணைவு வெறும் அனுசரணை மட்டுமல்லாது இலங்கையில் வளர்ந்து வரும் வாகன சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதற்கான செலான் வங்கியின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. வாகன ஆர்வலர்கள், வணிகங்கள் மற்றும் தொழில்துறை புதுமையாளர்களை இணைக்கும் இத் தளத்தை நாங்கள் தொடர்ந்து எட்டு வருடங்களாக ஆதரித்து வருகிறோம். எமது சிறப்பு லீசிங் மற்றும் வங்கி தீர்வுகள் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாகன உரிமை மற்றும் அதற்குரிய நிதி அணுகலை எளிதாக்க நாங்கள் தொடர்ந்து எம்மாலான சேவைகளை வழங்கி வருகிறோம்.”என செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவிப் பொது முகாமையாளர், ஆசிரி அபயரத்ன தெரிவித்தார்.
இவ் இணைவு மூலம் செலான் வங்கி தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் தனிப்பயனாக்கப்பட்ட நிதித் தீர்வுகளை வழங்குவதோடு வாகனத் துறைக்கான தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலதிக தகவலுக்கு 011-200 88 88 என்ற எண்ணில் செலான் வங்கியை தொடர்பு கொள்ளவும்.

