Nov 21, 2025 - 11:03 AM -
0
பல தசாப்தங்களாக, இலங்கையின் ஆடைத் தொழில் ஒரு தேசிய வெற்றிக் கதையாக நிலைத்துள்ளது — வெளிநாட்டு முதலீடு, நெறிமுறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை ஒன்றிணைத்த ஒரு கதை. ஆனால் பெரிய ஏற்றுமதியாளர்களின் பளபளக்கும் தொழிற்சாலைத் தளங்களுக்கு பின்னால், வேறொரு கதையும் உள்ளது. அதிகரித்து வரும் செலவுகள், கடுமையாகும் கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்து வரும் நிதி அணுகல் ஆகியவற்றின் கீழ் மிதக்கப் போராடும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) கதை.
இந்த சிறிய நிறுவனங்கள் ஆடைத் துறை சூழலின் கண்ணுக்குத் தெரியாத முதுகெலும்பாக உள்ளன — பெரிய நிறுவனங்கள் உலகளவில் போட்டியிட உதவும் குறைப்பு, பாகங்கள், சிறிய அளவிலான உற்பத்தி மற்றும் சிறப்பு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்குகின்றன. இருப்பினும், அவற்றின் முக்கிய பங்கு இருந்தும், பல SME உற்பத்தியாளர்கள் தற்போது தங்கள் உயிர் பிழைப்பதற்கு தேவையான ஆதரவிலிருந்து பெருகிய முறையில் துண்டிக்கப்பட்டதாக உணர்கின்றனர்.
VAT இரட்டைப் பிரச்சனை: போட்டித்திறனுக்கான ஒரு சவால்
தற்போதைய மிக அவசரமான சவால்களில் ஒன்று, புதிதாக விதிக்கப்பட்ட VAT தேவையாகும். சமீப காலம் வரை, ஏற்றுமதியாளர்களுக்கான இறக்குமதி பொருட்கள் மீதான வரி விலக்கு பெற்றிருந்தன. இப்போது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 18 சதவீத VATஐ முன்கூட்டியே செலுத்த வேண்டியுள்ளது. இது ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தி போட்டித்திறனையும் குறைக்கிறது.
கட்டுநாயக்காவைச் சேர்ந்த ஒரு ஆடை உற்பத்தியாளர் இவ்வாறு கூறுகிறார்: முன்பு, ஏற்றுமதி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் சுங்க வரி இல்லாமல் வந்தன. இன்று, முடிவுப் பொருள் ஏற்றுமதிக்காகத்தான் பயன்படுத்தப்படும் என்பதைத் தவிர, நாங்கள் 18 சதவீத VATஐச் செலுத்துகிறோம். பெரும்பாலான BOI நிறுவனங்கள் 1,300 பட்டியலில் வந்துவிட்டன. அதனால் இனி இந்த வரிவிலக்கு உரிமை இல்லை. அனைவருக்கும் சமமான வாய்ப்பு இங்கு இல்லை. பெரியது சிறியது எனப் பாராமல் ஏற்றுமதியாளர்களைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.”
பலருக்கு, இந்த மாற்றம் ஒரு சங்கிலி விளைவை உருவாக்கியுள்ளது. பணப்புழக்கத் தடைகள், ஓடர்களில் தாமதங்கள் மற்றும் இயந்திரங்கள் அல்லது தொழில்நுட்ப மேம்படுத்தல்களில் முதலீடு செய்ய இயலாமை. நிலையான நிதி இருப்பு கொண்ட பெரிய ஆடைக் குழுமங்களைப் போலல்லாமல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையான இலாப விகிதத்தில் இயங்குகின்றன. அங்கு சிறிய கோட்பாட்டு மாற்றங்கள் கூட சமநிலையைக் குலைக்கும்.
நிதி: காணாமல் போன இணைப்பு
நிதி அணுகல் இன்னும் மிகப்பெரிய தடையாக உள்ளது. வங்கிகள் எப்போதும் உத்தரவாதம் கேட்கின்றன. ஆனால் நமக்குத் தேவை பக்கதுணை மட்டும் அல்ல. வணிக முன்னறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்ட கடன்கள். என்று மற்றொரு SME உரிமையாளர் விளக்குகிறார். பிற நாடுகளில், வங்கிகள் தொழில்முனைவோருடன் இடர்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்றன. நம்முடையவை ஏன் அப்படிச் செய்ய முடியாது?
பெரும்பாலான சிறிய ஆடை உற்பத்தியாளர்களுக்கு, வெளிநாட்டு சந்தைப்படுத்தல், நவீன இயந்திரங்கள் அல்லது தானியங்கி தொழில்நுட்பம் ஆகியவற்றில் முதலீடு செய்ய மூலதனம் இல்லை. இவை செலவு திறமை மற்றும் தொழிலாளர் உற்பத்தித்திறனை பேணுவதற்கு முக்கியமான காரணிகள் ஆகும். ஊதியங்கள் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை அதிகரிப்பதால், தானியங்கமாக்கமே நீண்டகால நிலைத்தன்மைக்கான பாலமாக இருக்க முடியும். இருப்பினும், மலிவு விலை நிதி வசதிகள் இல்லாமல், அது அடைய முடியாத ஒன்றாகவே உள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் சந்தை அணுகல்
டிஜிட்டல்மயமாக்கல், ஒன்லைனில் வாங்குபவர் ஈடுபாடு, வெளிப்படையான விநியோகச் சங்கிலி கண்காணிப்பு மற்றும் வடிவமைப்பு அல்லது உற்பத்தி மென்பொருளுக்கான அணுகல் வழியாக SMEக்களுக்கு புதிய வாழ்வாதாரங்களை வழங்க முடியும். இருப்பினும், உண்மையான அமைப்புகளை ஏற்க தேவையான தொழில்நுட்ப திறமை அல்லது மூலதனம் சிலருக்கு மட்டுமே உள்ளது. பலரால் தொழில்முறை சந்தைப்படுத்துபவர்கள் அல்லது வர்த்தகநாம மூலோபாயவாதிகளை வாங்க முடியாது. இதனால் அவர்கள் ஒரு சில உள்ளூர் வாங்குபவர்களையோ அல்லது மெல்லிய இலாபத்தையும் சிறிய வளர்ச்சியையும் வழங்கும் துணை ஒப்பந்த உறவுகளையோ சார்ந்து இருக்கிறார்கள்.
இலக்கு வைக்கப்பட்ட அரசு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு அதை மாற்றக்கூடும். பகிரப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு மானியங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தக கண்காட்சிகளில் SME பங்கேற்பு ஆகியவை சிறிய நிறுவனங்கள் நெறிமுறை மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட மூலப்பொருட்களை தேடும் சர்வதேச வாங்குபவர்களுக்கு தங்கள் கதைகளைச் சொல்ல உதவும்.
இடைவெளியை இணைத்தல்
இலங்கையின் ஆடைத் தொழிலின் வெற்றி, பெரிய ஏற்றுமதியாளர்களில் இருந்து சிறிய பிராந்திய பயிற்சிப் பட்டறைகள் வரை உள்ள விநியோகச் சங்கிலி முழுவதும் பகிரப்படுவதை எவ்வாறு உறுதி செய்யலாம் என்பதே சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை குறித்த பெரிய கேள்வியாகும்.
இதற்கான விடை கூட்டு பங்கேற்பில் உள்ளது. அரசு, நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் இடையே வலுவான ஒத்துழைப்பு விரும்பத்தக்கது மட்டுமல்ல, இன்றியமையாததாகும். அரசியலமைப்பாளர்கள், நிதி ஒழுக்கத்தை ஏற்றுமதி போட்டித்திறனுடன் சமநிலைப்படுத்தும் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும், அதே நேரத்தில் புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பை வளர்க்கும் கணக்கிடப்பட்ட ஆபத்துகளை எடுக்க வங்கிகள் அதிகாரம் பெற வேண்டும்.
ஒரு சிறு மற்றும் நடுத்தர நிறுவன (SME) உரிமையாளர் இவ்வாறு கூறுகிறார்:
நாங்கள் நிதியுதவி கேட்பதில்லை, ஒரு நியாயமான வாய்ப்பு மட்டுமே கேட்கிறோம். சிறிய உற்பத்தியாளர்கள் வளரும் போது, முழுத் தொழிலும் வலுப்பெறுகிறது. இலங்கையின் ஆடைத் துறை எப்போதும் நெகிழ்வுத்தன்மை மற்றும் விரிதிறன் ஆகியவற்றின் மீது செழித்து வளர்ந்துள்ளது. ஆனால் நெகிழ்வுத்தன்மை என்பது சாத்தியமற்ற சூழ்நிலைகளுக்கு எதிராகப் போராடுவதாக இருக்கக்கூடாது. சரியான அளவிலான நிதி ஆதரவு, புத்திசாலித்தனமான கோட்பாடுகள் மற்றும் பொதுவான நோக்கம் ஆகியவற்றின் கலவையால், நாட்டின் ஆடை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஒப்பந்ததாரர்களிலிருந்து மூலோபாய கூட்டாளிகளாக மாற்றி, போட்டி அதிகரிக்கும் உலக சந்தையில் இலங்கை ஒரு நம்பகமான, உயர் மதிப்புள்ள மூலப்பொருள் மையமாகத் தொடர உதவ முடியும்.

