Nov 21, 2025 - 11:12 AM -
0
இலங்கையின் அதி சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் குறிப்பிடத்தக்கதாக உருவாகியுள்ள Sapphire Residences அண்மையில் ஊடகங்களுக்கு சிறப்பு ஊடக பார்வை சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள இவ் வதிவிடம் நகர வாழ்க்கையை மேலும் உயர்தரத்தில் அனுபவிக்க கூடிய புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது. இலங்கையின் உயர்தர குடியிருப்புகளுக்கு சர்வதேச அரங்கில் தனிச்சிறப்பை வழங்கும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது. இது ITC Hotels Limitedஇன் முழு உரிமைத்துவம் பெற்ற துணை நிறுவனமும் உலகளாவிய ரீதியாக புகழ்பெற்ற ITC குழுமத்தின் ஒரு பகுதியுமான WelcomHotels Lanka (Private) Limitedஆல் உருவாக்கப்பட்டுள்ளது. உயர்தர வசதிகளும் ஆடம்பர வாழ்க்கைமுறையும் இணைந்த வகையில் நேர்த்தியான வடிவமைப்புடன் நீடித்த பயன்பாட்டை கருத்தில் கொண்டு Sapphire Residences அமைக்கப்பட்டுள்ளது.
இவ் வதிவிடம், கடலுக்கும் Beira ஏரிக்கும் இடையில் முக்கோண வடிவிலான கட்டமைப்பில் அமைந்துள்ளது. அதன் வடக்கு மற்றும் தெற்கு பக்கங்கள் கடலை நோக்கியும் கிழக்குப் பக்கம் ஏரி மற்றும் நகரத்தை நோக்கியும் அமைக்கப்பட்டுள்ளதால் கட்டிடத்தின் எவ்விடத்தில் இருந்து பார்த்தாலும் அழகிய காட்சிகளை காணலாம். இந்த உயர்தர வதிவிடத் திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை திட்டமிடலில் WelcomHotels Lanka, முன்னணி சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. இதற்கு முதன்மை கட்டிடக் கலைஞர்களான Gensler (USA), உள்ளூர் கட்டிடக் கலைஞர்களான Surath Wickramasinghe Associates, உள்ளக வடிவமைப்பாளர்களான YOO Inspired by Philippe Starck (UK), கட்டமைப்பு பொறியாளர்கள் Thornton Tomasetti (USA), இயற்கை சூழல் வடிவமைப்பாளர் Burega Farnell (Singapore), பாதுகாப்பு ஆலோசகர் Control Risks உள்ளிட்ட பிற முன்னணி சர்வதேச வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள் பங்களித்துள்ளனர்.
இவ் அடுக்குமாடி தொடரின் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை Sotheby’s International Realty கையாளுகிறது. இந்த உயர்தர வதிவிடத் திட்டத்தின் சிறப்பு ஊடக சுற்றுப்பயணம் அண்மையில் நடைபெற்றது. இந்த சுற்றுப்பயணம், Sapphire Residencesஇன் அதிநவீன வசதிகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த வாழ்க்கை முறையை ஊடகங்களுக்கு சிறப்பான முறையில் காட்சிப்படுத்தியது.
Sapphire அடுக்குமாடி குடியிருப்பில் 132 அதிசொகுசு குடியிருப்புகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் Sky Mansion என்னும் கருப்பொருளின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளன. முழு குடும்பத்திற்கும் சௌகரியம், தனிமை மற்றும் உயர்தர வாழ்க்கைமுறையின் அனுபவத்தை வழங்கும் வகையில் இவை மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. தரையிலிருந்து கூரை வரை சராசரியாக 4 மீட்டர் உயரமும், சராசரியாக 5,500 சதுர அடி பரப்பளவும் கொண்ட ஒவ்வொரு Sky Mansionமும் கடல், ஏரி மற்றும் நகரத்தின் விரிந்த காட்சிகளை ரசிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. நகரத்தின் பரபரப்பிலிருந்து விலகி உயரத்தில் அமைந்துள்ள இந்த வதிவிடங்கள் நவீனத்துவம், திறந்த தன்மை மற்றும் காற்றோட்டம் ஆகியவற்றை முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன.
Sapphireஇல் வசிப்பவர்கள் சிறப்பு club வசதிகள், நீச்சல் தடாகங்கள், உடற்பயிற்சி வலயங்கள், பொழுதுபோக்கு இடங்கள், உள்ளக ஸ்குவாஷ் விளையாட்டரங்கு, பல்நோக்கு விளையாட்டரங்கு ஆகியவற்றுடன் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினருக்கென வடிவமைக்கப்பட்ட இடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நல்வாழ்விற்கான வசதிகளை அனுபவிப்பார்கள். அருகிலுள்ள ITC ரத்னதீப சொகுசு ஹோட்டலுடனான இணைவு மூலம் ஐந்து நட்சத்திர விருந்தோம்பல் வசதிகளையும் குடியிருப்பாளர்கள் அனுபவிக்கலாம்.
Sapphire Residences பெற்றுள்ள LEED பிளாட்டினம் சான்றிதழ், பொறுப்பான நகர்ப்புற வாழ்க்கையை உருவாக்கும் ITC குழுமத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. ஆற்றல் சேமிப்பு, நீர் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பொருட்களின் பயன்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் வழியாக இந்த பிரமாண்ட வதிவிடம் ஆடம்பரத்தையும் நிலைத்தன்மையையும் அழகாக இணைத்து நிற்கிறது. ஒவ்வொரு Sky Mansion குடியிருப்பும் விளக்குகள், வெப்பநிலை மற்றும் அன்றாட செயல்பாடுகளை எளிதாக கட்டுப்படுத்தக்கூடிய வகையில் மேம்பட்ட தன்னியக்க அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், குடியிருப்போரின் ஆறுதல், பாதுகாப்பு மற்றும் ஆற்றல் திறன் மேலும் பேணப்படுகிறது.
இது தொடர்பாக WelcomHotels Lanka (Private) Limitedஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் சுபி ஜோர்ஜ் கூறுகையில், “இலங்கையின் அடுக்குமாடி குடியிருப்பு வரிசையில் Sapphire Residences முக்கிய இடத்தை பெற்றுள்ளது. உலகத் தரத்திலான வடிவமைப்பு மற்றும் பொறுப்பான நகர்ப்புற வாழ்க்கை ஆகியவற்றை இணைத்து தெற்காசியாவில் உயர்தர குடியிருப்புகளுக்கான புதிய வரைமுறைகளை அமைப்பதில் நாம் பெருமையடைகிறோம். சிறந்த வடிவமைப்பு மற்றும் சூழலுக்கு உகந்த திட்டங்களை உருவாக்கும் எங்கள் குறிக்கோளிற்கு Sapphire Residences ஓர் சிறந்த உதாரணம் ஆகும். என்றார்.
Sotheby’s International Realty Sri Lankaஇன் தலைமை விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரி நெலூகா டி அல்விஸ் கருத்து தெரிவிக்கையில், “கொழும்பின் மத்தியில் உயர்தர வாழ்க்கைமுறையை அனுபவிக்க Sapphire Residences ஒரு அரிய வாய்ப்பாகும். ஒவ்வொரு Sky Mansionம் தனிமை, பரந்த இடம் மற்றும் அழகிய காட்சிகளை குடியிருப்பாளர்களுக்கு வழங்கவென மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ் வதிவிடம் நவீன வசதிகள் மற்றும் ஐந்து நட்சத்திர விருந்தோம்பலுக்கான வசதியையும் குடியிருப்பாளர்களுக்கு வழங்குகிறது. எதிர்காலத்திற்கு ஏற்ற உயர்தர வசதிகளுடனான வீட்டைத் தேடும் விவேகமுள்ள வாங்குபவர்களுக்கு இந்த அற்புதமான படைப்பை வழங்குவதில் Sotheby's International Realty மகிழ்ச்சியடைகிறது.” என்றார்.

