வணிகம்
செலிங்கோ லைஃப் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்காக பொருத்தமான நோக்கத்திற்காக கட்டப்பட்ட புதிய கிளையை நிட்டம்புவவில் திறந்துள்ளது

Nov 21, 2025 - 11:18 AM -

0

செலிங்கோ லைஃப் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்காக பொருத்தமான நோக்கத்திற்காக கட்டப்பட்ட புதிய கிளையை நிட்டம்புவவில் திறந்துள்ளது

செலிங்கோ லைஃப் நிறுவனத்தினால் தனது சொந்த நிலத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட கட்டிடமானது, இந்த பிரதேசத்தில் இவ்வாறு சொந்தக்கட்டிடத்தில் இயங்கும் முதலாவது காப்புறுதி நிறுவனமாகும். இது வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சேவைத் தரங்களை மேம்படுத்த உயர்தர, சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் நிறுவனத்தின் நீண்டகால யுக்தியை பிரதிபலிக்கிறது. 

இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான செலிங்கோ லைஃப் நிட்டம்புவவில் இந்தப் புதிய கிளையைத் திறந்ததன் மூலம் நிலையான விரிவாக்கத்திற்கான அதன் உறுதிப்பாட்டில் மற்றொரு படியை முன்னோக்கி எடுத்துள்ளது. இந்த கட்டிடமானது நிறுவனத்தின் நாடு முழுவதும் உள்ள வலையமைப்பில் நிறுவனத்திற்குச் சொந்தமான 34வது கட்டிடமாகும். 

நிட்டம்புவ, ஹொரகொல்லவத்த, கொழும்பு வீதியில், இலக்கம் 251/B/4 என்ற முகவரியில் அமைந்துள்ள இந்தப் புதிய கிளையானது, செலிங்கோ லைஃப் தலைவர் திரு. ஆர். ரெங்கநாதன் மற்றும் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. துஷார ரணசிங்க ஆகியோரால், பணிப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவத்தினர் முன்னிலையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. 

5,750 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த விசாலமான மூன்று மாடி கட்டிடமானது, தேசிய பொறியியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தால் (NERD) சிக்கனமான முறையில் தயாரிக்கப்பட்ட கொன்கிரீட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தொடர்ச்சியான பசுமை முயற்சிக்கு இணங்க, நிட்டம்புவ கிளையானது, மழைநீர் சேகரிப்பு வசதி, கழிவுநீரைச் சுத்திகரித்து, கழிப்பறை மற்றும் தோட்டங்களுக்கு மீண்டும் பயன்படுத்தும் வசதி மற்றும் ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள் மற்றும் குளிரேற்றும் முறைமைகள் உள்ளிட்ட பல ஆற்றல் திறன் கொண்ட மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. 

நிறுவனத்தின் கிளை வலையமைப்பில் முதன்முறையாக, நிட்டம்புவ கட்டிடமானது 100% தன்னிறைவு பெற்ற சூரிய மின்சார முறைமையுடன் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது தேசிய மின்சார கட்டமைப்பைச் சார்ந்திருப்பதை நீக்கும். இந்த வடிவமைப்பானது இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டத்தையும் அதிகரிக்கிறது, பசுமையை அதிகரிப்பதற்காக புல் வளர்ப்பிற்கான ஒன்றோடொன்று இணையும் கற்களை பயன்படுத்துவதுடன் மேலும் கட்டிட நிர்மாணிப்பின் போது எந்த மரங்களும் வெட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. தற்போதுள்ள மரங்கள் கட்டிடத்தின் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த கிளைக்கட்டிடமானது பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போதுமான வாகன நிறுத்தும் வசதி, இயற்கை வனப்புடைய தோட்டப் பகுதி மற்றும் எதிர்கால விரிவாக்கத்திற்கான ஒதுக்கீடுகளை வழங்குகிறது. இது நிதிச் சேவைத் துறையில் நவீன, நிலையான கட்டுமானத்திற்கான ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. 

புதிய கிளை தொடர்பாக கருத்து தெரிவித்த செலிங்கோ லைஃப்பின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. துஷார ரணசிங்க, ஆயுள் காப்புறுதித் துறையில் சந்தைத் தலைவராகவும், இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் நிறுவனங்களில் ஒன்றாகவும், வரவேற்கத்தக்க, சுற்றுச்சூழல் பொறுப்புள்ள சூழலில் விதிவிலக்கான வாடிக்கையாளர் சேவையை வழங்க நாம் தயாராக காத்து இருக்கிறோம். நோக்கத்திற்காக கட்டமைக்கப்பட்ட, நிறுவனத்திற்குச் சொந்தமான கிளைகளில்எமது முதலீடானது, எமது வாடிக்கையாளர்களுக்கும் நாட்டிற்கும் நீண்டகால மதிப்பு உருவாக்கத்தில்எமது நம்பிக்கையை நிரூபிக்கிறது என்று கூறினார். 

அதனைத் தொடர்ந்து, தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் விளையாட்டு, கலை, நாடகம், புத்தாக்கம் அல்லது படைப்பாற்றல் துறைகளில் சிறந்து விளங்கிய இளம்மாணவர்களுக்கு 10 தகுதிகாண் விருதுகளும் வழங்கப்பட்டன. 

அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன. 2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 19 வது ஆண்டாக மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக வாக்களித்தது, தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (CIMA) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம் என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.

Comments
0

MOST READ
01
02
03
04
05