வணிகம்
ஜனசக்தி பைனான்ஸ் மற்றும் டொயோட்டா லங்கா ஆகியன மூலோபாய வாகன லீசிங் பங்காண்மையை அறிமுகம் செய்துள்ளன

Nov 21, 2025 - 11:23 AM -

0

ஜனசக்தி பைனான்ஸ் மற்றும் டொயோட்டா லங்கா ஆகியன மூலோபாய வாகன லீசிங் பங்காண்மையை அறிமுகம் செய்துள்ளன

இலங்கையின் வாகன உரிமையாண்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலமைந்த முக்கியத்துவம் வாய்ந்த கைகோர்ப்பில், JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டதுமான, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி மற்றும் டொயோட்டா லங்கா (பிரைவட்) லிமிடெட் ஆகியன மூலோபாய பங்காண்மைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் அண்மையில் கைச்சாத்திட்டிருந்தன. இந்தக் கைகோர்ப்பினூடாக, ஜனசக்தி பைனான்ஸ் நிறுவனத்தின் நிதிசார் வலிமை மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய நிபுணத்துவம் ஆகியன டொயோட்டா லங்காவின் வாகன நிபுணத்துவத்துடன் ஒன்றிணைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு புத்தாக்கமான மற்றும் நெகிழ்ச்சியான லீசிங் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

டொயோட்டா லங்கா நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்டு மற்றும் விற்பனை செய்யப்படும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு இந்தப் பங்காண்மையின் பிரதான அங்கமாக, இணைந்த லீசிங் ஊக்குவிப்புத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புத்தம்புதிய அல்லது ஏற்கனவே உரிமைகொள்ளப்பட்ட வாகனமாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு தற்போது சிக்கனமான, இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய மற்றும் ஒப்பற்ற லீசிங் தெரிவுகளை தமது நிதி இலக்குகள் மற்றும் வாழ்க்கை முறைத் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். 

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் நடைமுறைச் சாத்தியமான மற்றும் நெகிழ்ச்சியான வாகன நிதிவசதியளிப்பு தீர்வுகளுக்கு நேரடியாக பதிலளிக்கும் வகையில் இந்த கைகோர்ப்பு அமைந்துள்ளது. வாகனத் துறையில் டொயோட்டா லங்காவின் சந்தை தலைமைத்துவமும், 44 வருடங்களாக நிதிச் சேவைகள் துறையில் ஜனசக்தி பைனான்ஸ் கொண்டுள்ள நம்பிக்கை ஆகியன ஒன்றிணைந்து, ஒப்பற்ற சௌகரியம், தொடர்ந்தியங்கும் திறன் மற்றும் வாடிக்கையாளர் பெறுமதி ஆகியவற்றை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “நிதிசார் உள்ளடக்கத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை வழங்கி வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் எமது தொடர்ச்சியான நோக்கில், டொயோட்டா லங்கா உடனான மூலோபாய பங்காண்மை முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. டொயோட்டா லங்காவின் உறுதியான தயாரிப்பு வழங்கல்களுடன், எமது லீசிங் நிபுணத்துவத்தை இணைத்து, வாடிக்கையாளர்களுக்கு வாகனமொன்றின் உரிமையாண்மையை கொண்டிருப்பதற்கு எளிமையான, துரிதமான மற்றும் ஸ்மார்ட்டான வழிமுறையை வழங்கக்கூடியதாக இருக்கும்.” என்றார். 

வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் சேவை விநியோகத்தை மேம்படுத்துவதற்கான பரந்த இணைந்த கட்டமைப்பை வெளிப்படுத்துவதாக இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொள்ளக் காணப்படும் லீசிங் தெரிவு தொடர்பில் அவசியமான விளக்கமளிப்புகளை பெற்றுக் கொடுப்பதற்காக டொயோட்டா லங்காவின் விற்பனை அதிகாரிகளுக்கு பரந்தளவு பயிற்சிகளை ஜனசக்தி பைனான்ஸ் வழங்கும். அத்துடன், வாகன கொள்வனவுக்காக நிதிச் சேவைகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை ஜனசக்தி பைனான்ஸ் நிறுவனத்துக்கு அறிமுகம் செய்யும் செயற்பாடுகளை டொயோட்டா லங்கா முன்னெடுத்து, காட்சியறையிலிருந்து, வீதிகளில் பயணிக்கும் வரை ஒன்றிணைந்த வாடிக்கையாளர் பயண அனுபவத்தை ஏற்படுத்தும். 

சமத்துவமான சந்தைப்படுத்தல் தோற்றப்பாட்டை உறுதி செய்வதில் இரு வர்த்தக நாமங்களும் தம்மை அர்ப்பணித்துள்ளன. சமூக ஊடகங்கள், காட்சியறை ஊக்குவிப்புத்திட்டங்கள் மற்றும் விளம்பரப்படுத்தல் கட்டமைப்புகள் போன்றவற்றில் இணைந்த வர்த்தகநாமம் பொறிக்கப்பட்ட பிரச்சாரத் திட்டங்களை முன்னெடுக்கும். அதனூடாக இணைந்த லீசிங் ஊக்குவிப்புத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு மேம்படுத்தப்படும். சேவை வழங்கல்களின் தோற்றப்பாட்டை மேம்படுத்துவதாக இந்த முயற்சிகள் அமைந்திருப்பதுடன், தொலைநோக்குடைய, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தொழிற்துறை முன்னோடிகள் எனும் நிலையை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளன. 

டொயோட்டா லங்கா முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மனோஹர அத்துகோரல கருத்துத் தெரிவிக்கையில், “டொயோட்டா லங்காவைச் சேர்ந்த நாம், நிலைபேறான போக்குவரத்து தீர்வுகளை வழங்கி வாழ்வுகளுக்கு வளமூட்டுவதற்காக எம்மை அர்ப்பணித்துள்ளோம். ஜனசக்தி பைனான்ஸ் உடனான எமது பங்காண்மையினூடாக, இந்த நோக்கத்திற்கு வலுவூட்டப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா வாகனங்களின் தரம் மற்றும் நீடித்தியங்கும் திறனை சுலபமாக அனுபவிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்படும். ஒன்றிணைந்து, பாதுகாப்பான, ஸ்மார்ட்டான மற்றும் அணுகக்கூடிய போக்குவரத்து தீர்வுகளை அனைத்து இலங்கையர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கும் பகிரப்பட்ட நோக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கிறோம்.” என்றார். 

இரு தரப்பினருக்கும் பெருமளவு மூலோபாய அனுகூலங்களை வழங்குவதாக இந்த கைகோர்ப்பு அமைந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட வர்த்தக நாம நிலைப்படுத்தல் முதல், ஆழமான வாடிக்கையாளர் உறவுகளை கட்டியெழுப்புவதற்கான சந்தை அடைவு மற்றும் நீண்ட கால வியாபார வளர்ச்சி போன்றன இந்த கைகோர்ப்பினூடாக எய்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த வாகனங்களை நிதித் தீர்வுகளினூடாக வெளிப்படையாகவும், நம்பிக்கையான முறையிலும் அணுகுவதற்கு அவசியமான சாதனங்கள் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை வழங்குவதாக அமைந்துள்ளது. 

நிதிசார் சேவை வழங்கல் என்பதற்கு அப்பால், போக்குவரத்து, உள்ளடக்கம் மற்றும் புத்தாக்கம் போன்றவற்றுக்கான பகிரப்பட்ட நோக்கம் இந்தப் பங்காண்மையினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் வாகன உரிமையாண்மையை நிறைவேற்றிக்கொள்வதற்கான ஒரு முக்கிய படியாக இது அமைந்துள்ளதுடன், இலங்கையர்களுக்கு சிறப்பாக சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஜனசக்தி பைனான்ஸ் மற்றும் டொயோட்டா லங்கா ஆகியன கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது. 

ஜனசக்தி பைனான்ஸ் பற்றி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது) 

ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச் சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 43 வருட கால உறுதித் தன்மை, வலிமை, தங்கியிருக்கும் திறன் மற்றும் நிபுணத்துவதும் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச் சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்ற நிறுவனமாகும். LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05