வணிகம்
சீரோ சான்ஸ் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில், சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிரான விழிப்புணர்வை மையப்படுத்திய மாணவர்களின் படைப்பாற்றல்களுக்கான கௌரவிப்பு

Nov 21, 2025 - 12:08 PM -

0

சீரோ சான்ஸ் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில், சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிரான விழிப்புணர்வை மையப்படுத்திய மாணவர்களின் படைப்பாற்றல்களுக்கான கௌரவிப்பு

கடந்த 2025 நவம்பர் 15ஆம் திகதி, கொழும்பு BMICH இல் நடைபெற்ற சீரோ சான்ஸ் சித்திரம் மற்றும் கட்டுரை போட்டியின் பரிசளிப்பு விழாவில் (zero Chance art and Essay award ceremony), தொடர்ந்து மூன்றாவது வருடமாக இலங்கை மாணவர்களின் படைப்பாற்றல்கள் கௌரவிக்கப்பட்டன. அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத குடியேற்றப் பயணத்தின் அபாயங்களைப் பற்றிய விழிப்புணர்வை தங்கள் சித்திரங்கள் மற்றும் எழுத்தாற்றல்கள் மூலம் மாணவர்கள் எவ்வாறு வெளிப்படுத்தினர் என்பதைக் கவனிக்கச் செய்த நிகழ்வாக இது அமைந்தது. 

2025 ஆம் ஆண்டு மே 19 முதல் ஜூலை 17 வரை நடைபெற்ற இப் போட்டியில், 20 மாகாணங்களைச் சேர்ந்த 42 பாடசாலைகளில் இருந்து சித்திரப் பிரிவில் 1,170 மற்றும் கட்டுரைப் பிரிவில் 1,762 என, மொத்தம் 2,932 படைப்புகள் கிடைக்க பெற்றன. அவற்றில் 199 மாணவர்கள் முதல் மூன்று இடங்களைத் தட்டிச் சென்றனர். அதேபோன்று, 60 மாணவர்கள் நான்காம், ஐந்தாம் இடங்களுக்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். அவுஸ்திரேலிய அரசாங்கம், கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு ஆகியவற்றின் இணைந்த கூட்டு முயற்சியாக அமைந்த இந்தப் போட்டியானது, ‘ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத கடல் வழிக் குடியேற்றத்துடன் தொடர்புடைய அபாயங்கள்’ குறித்த மாணவர்களின் புரிதலை வெளிப்படுத்த ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.” 

“படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முயற்சிப்பது ஒரு முட்டாள்தனமான செயலாகும்.” 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மதிப்பிற்குரிய மத்யூ டக்வர்த் (Matthew Duckworth) கருத்துத் தெரிவிக்கையில்: 

“அவுஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாக்கவும், பிராந்தியத்தில் ஆட்க்கடத்தலை எதிர்த்துப் போராடவும், மிக முக்கியமாக, மக்கள் கடலில் தங்கள் உயிரைப் பணயம் வைப்பதைத் தடுக்கவும் உருவாக்கப்பட்ட இராணுவ தலைமையிலான எல்லை பாதுகாப்பு செயன்முறையான “இறையாண்மை எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை” (Operation Sovereign Borders) 13 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது.” என குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்: 

இந் நடவடிக்கையின் பின்னர், அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ஒவ்வொரு இலங்கை ஆட்கடத்தல் படகும் தடுத்து நிறுத்தப்பட்டு, அதில் இருந்த அனைவரும் இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நடவடிக்கையின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணமாக அமைவது ‘சீரோ சான்ஸ்’ (Zero Chance) மூலோபாய தகவல் தொடர்பாடல் பிரசாரமாகும். இது ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்வதில் இருந்து மக்களைத் தடுக்கவும், அவர்களுக்கு அறிவுறுத்தவும், மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்றார். 

மாணவர்கள் ஊடாக இந் நிகழ்வு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கருத்து வெளியிட்ட அவர்: “மாணவர்களாகிய நீங்கள், சிறந்த எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும், பரந்த அளவிலான மக்களிடையே ஒரு முக்கியமான விடயத்தை கொண்டுசேர்க்க உதவியுள்ளீர்கள். இலங்கையர்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும் உயிர்களையும் பணயம் வைப்பதைத் தடுத்துள்ளீர்கள்.” என்றார். 

சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட நடுவர்களால், தரம் 9–11 மற்றும் தரம் 12–13 ஆகிய இரண்டு வயது பிரிவுகளின் கீழ் மதிப்பிடப்பட்டன. 

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளரின் பிரதிநிதியும், கல்விப் பணிப்பாளருமான “வருண கலுவெவ கருத்து தெரிவிக்கையில் “சீரோ சான்ஸ் போட்டியின் வெற்றியை கொண்டாட இங்கு நான் அழைக்கப்பட்டிருப்பதை ஒரு பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்.. மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கு அப்பால் அவர்கள் விமர்சன ரீதியாக சிந்திக்கவும், அவர்களை சுற்றியுள்ள சூழ்நிலைகள் சார்ந்து அக்கறையுடன் செயற்படவும் வேண்டும் என்பதில் எமது கல்வி அமைச்சு அதிக கவனம் செலுத்துகின்றது . அனைத்து வழிகளிலும் இளையவர்கள் சிறந்து வளர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.” எனத் தெரிவித்தார். 

இத்திட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்; இன்று நாம் பெற்றுக்கொண்ட கருத்தாழம் மிக்க கட்டுரைகளும், உறுதியான கதைகளைச் சொல்லும் சொல்லும் ஓவியங்களும் எமது எதிர்கால தலைமைகளின் குரல்கள் ஆகும். கடினமான பிரச்சனைகளைக் புரிந்து கொள்வதற்கும் கையாள்வதற்கும், அறிவு மற்றும் உணர்வுகளைப் பயன்படுத்தி தீர்வுகள் காண்பதற்கும் கலை மற்றும் இலக்கியம் சக்திவாய்ந்த கருவிகளாக இருப்பதை இது நிரூபிக்கின்றது இந்த போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற ஒவ்வொரு திறமையான மாணவருக்கும் எமது நல்வாழ்த்துக்கள். உங்கள் சாதனை ஒரு சாதாரண வெற்றி அல்ல் அது துணிச்சலுடனும் ஒரு சுய கருத்தை வெளிப்படுத்துவதைப்பற்றியது , இவை குறித்து ஆராய, உங்கள் படைப்பாற்றலை பயன்படுத்தியதன் மூலம் நீங்கள் சமூகத்தில் புதிய மாற்றத்தை விதைக்க முயன்றுள்ளீர்கள் , அதன் வழியாக நீங்கள் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளீர்கள். என்றார். 

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இணைந்து கையொப்பமிட்ட சொன்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. அவர்களின் படைப்பாற்றலையும் தொழில்நுட்ப திறன்களையும் மேலும் வளர்க்கும் நோக்கில் , அவர்களுக்கு குறித்த துறை சார் பயிற்சிகளுக்கான புலமைப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. 

சீரோ சான்ஸ் பிரசாரத்தின் ஒரு முக்கிய அங்கமான சித்திரம் மற்றும் கட்டுரை போட்டித் செயற்த்திட்டம், இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது. இது விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே, அவுஸ்திரேலியாவிற்கான சட்டவிரோத குடியேற்றத்தின் அபாயங்கள் தொடர்பான முக்கியமான தகவல்களை பகிர்வதற்கும் உதவுகிறது. 

அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.australia.gov.au/zerochance

Comments
0

MOST READ
01
02
03
04
05