Nov 21, 2025 - 02:07 PM -
0
பங்களாதேஷில் இன்று 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் கோரஷால் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காலை 10:08 மணிக்கு, நர்சிங்டியிலிருந்து தென்மேற்கே 13 கி.மீ தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கம் இந்தியாவின் கொல்கத்தா, மேற்குவங்கம், அசாமின் குவஹாத்தி போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நில நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து வீடுகளிலிருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
முன்னதாக, இன்று பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
நிலநடுக்கத்தின் மையம் 135 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்தது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

