Nov 21, 2025 - 03:54 PM -
0
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் கல்வியாண்டில் தரம் 06 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்குரிய பாடசாலை ரீதியான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk இனுள் பிரவேசிப்பதன் ஊடாக, குறித்த வெட்டுப் புள்ளிகள் தொடர்பான முழுமையான விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தமது பெறுபேறுகளுக்கு ஏற்ப தமக்குக் கிடைத்துள்ள பாடசாலை எது என்பதனை அறிந்துகொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக https://g6application.moe.gov.lk என்ற இணையத்தளத்தினூடாகப் பிரவேசித்து, தமக்கு ஒதுக்கப்பட்ட பாடசாலையைத் துல்லியமாகப் பரிசோதித்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, தரம் 06 இற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள், மேற்குறிப்பிட்ட இணையத்தளங்களைப் பயன்படுத்தி உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

