செய்திகள்
கடல் வளங்களைப் பாதுகாக்க நவீன தொழில்நுட்பம்

Nov 21, 2025 - 05:11 PM -

0

கடல் வளங்களைப் பாதுகாக்க நவீன தொழில்நுட்பம்

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘அக்வா பிளான்ட் இலங்கை - 2025’ (Aqua Plant Lanka - 2025) சர்வதேச மீன்வளக் கண்காட்சி இன்று (21) கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. 

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கண்காட்சியைத் திறந்து வைத்தார். 

இப்பிராந்தியத்தின் மிகப்பெரிய கண்காட்சியாகக் கருதப்படும் இந் நிகழ்வில் அலங்கார மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

இக்கண்காட்சியானது நவம்பர் 21 முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதனை இலவசமாகப் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரம்ப நிகழ்வின் ஒரு பகுதியாக, உலக மீனவர் தின நினைவு முத்திரை வெளியிடப்பட்டதுடன், மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டமும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. 

அத்துடன், மீன்பிடித் தொழிலில் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாத முன்மாதிரியான மீனவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், "இலங்கையின் கடல் மற்றும் நீரியல் வளங்களைப் பாதுகாப்பதற்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் குழுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," எனத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இன்று ஆரம்பமான இந்த கண்காட்சி நாளை மற்றும் நாளை மறுதினமும் இடம்பெறுகின்றது. இதனை பார்வையிட வருமாறு மாணவர்கள் உட்பட அனைவரையும் அழைக்கின்றேன். 

இப்பிராந்தியத்தில் நடக்கும் மிகப்பெரிய கண்காட்சி இதுவாகும் என இதில் பங்கேற்றுள்ள ஒருவர் குறிப்பிட்டார். இதனை எமது நாட்டில் நடத்துவதற்கு கிடைத்த வாய்ப்பு பெருமையளிக்கின்றது. இதன்மூலம் உலகின் கவனத்தையும் ஈர்க்கலாம். 

எமது அமைச்சின் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு காரணமாகவே இவ்வளவு பெரிய கண்காட்சியை எம்மால் சிறப்பாக நடந்த முடிந்துள்ளது. அமைச்சின் பிரதி அமைச்சர் மற்றும் செயலாளர், பணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றிகள். 

எமது நாட்டு கடல் மற்றும் நீரியல் வளங்களை பாதுகாப்பதே மாநாட்டின் முதன்மை நோக்கமாகும். இது விடயத்தில் ஜனாதிபதியின், ஏனைய அமைச்சர்களின் அரசாங்கத்தின் முழு ஆதரவும் எமக்கு இருக்கின்றது. 

அதேவேளை, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைமூலம் எமது நாட்டு கடல்வளத்தை நாசமாக்கும் நடவடிக்கையில் சிறு மீனக்குழுவொன்று ஈடுபட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

நாட்டில் கடற்படையினர் முன்னர் போல் அல்ல. தற்போது நாட்டை கட்டியெழுப்புவதற்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05