Nov 21, 2025 - 06:15 PM -
0
நாட்டின் பல பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையைக் கருத்தில் கொண்டு, மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகளை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் இந்த முன்னெச்சரிக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை 04.00 மணி முதல் நாளை மாலை 04.00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
பதுளை மாவட்டம்: ஹப்புத்தளை, ஊவா பரணகம, கந்தேகெட்டிய, ஹல்துமுல்ல.
களுத்துறை மாவட்டம்: மத்துகம.
கண்டி மாவட்டம்: கங்க இஹல கோரளை, உடுநுவர, தும்பனே, பஸ்பாகே கோரளை, கங்கவட்ட கோரளை, உடுதும்பர, உடபலாத, பாதஹேவாஹெட்ட, யட்டிநுவர.
கேகாலை மாவட்டம்: அரநாயக்க, யட்டியாந்தோட்டை, தெரணியகல, கேகாலை, மாவனல்லை, ரம்புக்கன, கலிகமுவ, ருவான்வெல்ல, வரகாபொல.
குருநாகல் மாவட்டம்: மாவத்தகம, ரிதிகம, மல்லவபிட்டிய.
நுவரெலியா மாவட்டம்: வலப்பனை, அம்பகமுவ, ஹங்குரான்கெத்த, கொத்மலை.
இரத்தினபுரி மாவட்டம்: கொலன்ன, பலாங்கொடை, இம்புல்பே, கலவான, இரத்தினபுரி மற்றும் கிரியெல்ல.
ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

