Nov 22, 2025 - 01:21 PM -
0
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23) ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், நாளை காலை 11.00 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன:
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஏற்கனவே QR குறியீட்டுடன் (QR Code) கூடிய பிரத்தியேக நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நுழைவுச் சீட்டு வைத்துள்ளவர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
நுழைவுச் சீட்டு இல்லாத வேறு எவருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

