Nov 23, 2025 - 09:45 AM -
0
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (23) காலை 5.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நிலைக்கொண்டுள்ளது.
இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16 ஆம் திகதி தொடங்கியது.
இதன்பிறகு வங்கக்கடலில் உருவான 'மோன்தா' புயலனாது ஒரிசா அருகே கரையை கடந்தது.
இதனை தொடர்ந்து நேற்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது.

