Nov 23, 2025 - 11:43 AM -
0
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்திய கலந்துரையாடல் நேற்று (22) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாட்டின் அடிப்படையில் இந்த வருடமும் நூறு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட செயல்முறையின் இறுதிநாள் நிகழ்வாக குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது சமஷ்டி முறையினை பயன்படுத்துவதன் ஊடாக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும், ஒற்றையாட்சியின் பாரதூரமான நிலைமைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
குழுநிலையாக இந்த கலந்துரையாடலில் பிரதேச சபை உறுப்பினர் க.உசாந்தன் தலைமையில் இடம்பெற்றது
இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், சட்டத்தரணி உமாகரன் இராசையா, சட்டத்தரணி ஜோதிலிங்கம், உள்ளிட்டோர் கலந்து கொண்டு சமஷ்டி பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தினர்.
நிகழ்விலில் அதிகளவான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
--

