Nov 23, 2025 - 01:06 PM -
0
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது.
கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் இன்று (23) தொடங்கி இருக்கிறார்.
முன்னதாக சேலத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க இருந்தார்.
ஆனால் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
காஞ்சிபுரம் என்றாலே பட்டு என்று உலகத்திற்கே தெரியும். ஆனால் இன்றைய நெசவாளர் நிலை வறுமை, கந்துவட்டி கொடுமையாக உள்ளது.
இந்த அரசால் டெல்டா மாவட்ட விவசாயிகள் எப்படி பாதிக்கப்பட்டார்களே அதேபோல் நெசவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயமும் விவசாயிகளும் அழிந்தால் நாமெல்லாம் அழிந்து போக வேண்டியது தான்.
தி.மு.க அரசின் பிரச்சனை என்னவென்றால் மக்களைப் பற்றி சிந்திப்பதற்கே நேரமில்லை.
குறி வைத்தால் தவறாது, தவறும் என்றால் குறியே வைக்கமாட்டேன் எம்.ஜி.ஆர். வசனம் யாருக்கு என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
இந்த விஜய் சும்மா எதையும் சொல்ல மாட்டான்... ஒன்னு சொன்னா அதை செய்யாம விடமாட்டான்.
பவள விழா பாப்பா. நீ பாசாங்கு காட்டாதே பாப்பா. நீ நல்லவர் போல நடிப்பதை பார்த்து நாடே. என்று கூறி விட்டு சிரித்தார்.
அஞ்சலை அம்மாளின் சொந்தக்காரர் தான் நம்மை தற்குறி என அழைக்க வேண்டாம் என பேசினார்.
திமுக எம்எல் ஏ எழிலனின் ஆதரவு குரல் போன்ற குரல் அனைத்து வீடுகளிலும் எதிரொலிக்கும்.
கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்பதில் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை.
நடிகர் கட்சி... நடிகர் கட்சி என்று கூறிய ஒருத்தர் எம்.ஜி.ஆர். கூடவே போய் சேர்ந்துவிட்டார்.
ஏண்டா விஜய்யை தொட்டோம், ஏண்டா விஜய் கூட இருக்கும் மக்களை தொட்டோம் என Feel பண்ண போறாங்க.
எங்களுக்கு ஓட்டுபோட இருக்கும் மக்களை தற்குறி என்கிறீர்களே அவர்களிடம் தானே நீங்கள் ஓட்டு கேட்டீர்கள்.
தற்குறி என நீங்கள் கூறுபவர்கள் தான் உங்களின் தலையெழுத்தை மாற்றி எழுத போகிறார்கள்.
த.வெ.க. தொண்டர்கள் அனைவரும் தற்குறி அல்ல தமிழ்நாடு அரசியலின் ஆச்சரியக்குறி என்றார்.
தமிழ்நாடு அரசியலை மாற்றி எழுதப்போகும் அறிகுறி எனவும் தெரிவித்தார்.

