உலகம்
சூடானில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 23 குழந்தைகள் பலி

Nov 23, 2025 - 01:52 PM -

0

சூடானில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 23 குழந்தைகள் பலி

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்ட கால மோதல் போக்கு நிலவியது. 

கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த கிளர்ச்சி உள்நாட்டு போராக வெடித்தது. 

 

2.5 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த உள்நாட்டு போரால் சுமார் 1.5 கோடி பேர் தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறினர். 

இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை உருவானது. 

குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் ஒரு வேளை உணவுக்கே வழியின்றி தவித்தனர். 

இதன் காரணமாக அங்குள்ள கோர்டோபான் பிராந்தியத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 23 குழந்தைகள் இறந்ததாக சூடான் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05