Nov 23, 2025 - 02:16 PM -
0
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 49 ஓட்டங்களும் பவுமா 41 ஓட்டங்களும் பெற்றுக் கொடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் பொறுப்புடன் விளையாடிய செனுரன் முத்துசாமி - வெரெய்ன் ஜோடி நிதானமாக ஓட்டங்களை சேர்த்தது.
நிதானமாக விளையாடிய செனுரன் முத்துசாமி அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய வெரெய்ன் 45 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து முத்துசாமி - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தது.
சிறப்பாக விளையாடிய செனுரன் முத்துசாமி சதம் விளாசிய நிலையில் 109 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி தற்போது 8 விக்கெட்டுக்களை இழந்து 431 ஓட்டங்களை பெற்றுள்ளது.

