இந்தியா
சபரிமலை தங்க கொள்ளை வழக்கு - சாட்சியாக மாறும் நடிகர் ஜெயராம்?

Nov 23, 2025 - 05:47 PM -

0

சபரிமலை தங்க கொள்ளை வழக்கு - சாட்சியாக மாறும் நடிகர் ஜெயராம்?

சபரிமலை தங்க கொள்ளை வழக்கில் நடிகர் ஜெயராம் சாட்சியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலுக்குச் சொந்தமான ஆபரணங்களிலிருந்து தங்கம் திருடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சபரிமலை தங்க கொள்ளை வழக்கில் நடிகர் ஜெயராம் சாட்சியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும், ஜெயராமிடம் வாக்குமூலம் பெற சிறப்பு புலனாய்வுக் குழு திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05