Nov 24, 2025 - 08:18 AM -
0
ஐ.நா. பருவநிலை தொடர்பான உச்சி மாநாடு பிரேசிலில் கடந்த 10ஆம் திகதி ஆரம்பமானது.
இதில், பருவநிலை மாற்றத்தால் பாதித்த நாடுகளுக்கு கூடுதல் நிதி வழங்குவதற்கான ஒப்பந்தம் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், இந்த ஒப்பந்தத்தில் புதை படிவ எரிபொருட்களை படிப்படியாக குறைப்பதற்கான அல்லது போதுமான அளவு கார்பன் உமிழ்வு குறைப்பு திட்டங்களை வலுப்படுத்துவதற்கான வெளிப்படையான வரைவு திட்டம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
புதை படிவ எரிபொருட்களில் இருந்து விலகிச் செல்வதற்கான திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படாதது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிஓபி 30 தலைவர் கூறுகையில், “பெலேமில் தொடங்கப்பட்ட விவாதங்கள் அடுத்த வருடாந்திர மாநாடு வரை பிரேசிலின் தலைமையில் தொடரும்.
புதை படிவ எரிபொருள் மாற்றுத் திட்டம் நாங்கள் இப்போது அங்கீகரித்த உரையில் இடம்பெறவிட்டாலும் பின்னர் எனது குழுவால் வெளியிடப்படும் ஒரு தனித்திட்டத்தில் அது இடம்பெறும்" என்றார்.

