Nov 24, 2025 - 09:36 AM -
0
ஐதராபாத் இடையே புல்லட் ரயில் சேவை தொடர்பான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் தெற்கு மத்திய ரயில்வே அளித்துள்ளது.
இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு 2.20 மணி நேரத்தில் செல்லலாம்.
இந்தியாவில் முதல் புல்லட் ரயில் சேவை மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு தொடங்கப்பட உள்ளது. தற்போது, கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இதுதவிர நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இந்த புல்லட் ரயில் சேவையை விரிவுபடுத்த இந்திய மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
குறிப்பாக, தென்மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு புல்லட் ரயில் சேவை தொடங்க ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, சென்னை- ஐதராபாத், பெங்களூரு- ஐதராபாத் என 2 வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை- ஐதராபாத் இடையே புல்லட் ரயில் சேவைக்கான ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வழித்தடம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தெற்கு மத்திய ரயில்வே தயாரித்து, தமிழ்நாடு அரசிடம் வழங்கி உள்ளது.

