வணிகம்
வீட்டுக் கொள்வனவிற்கான 100% கடன் நிதியுதவி வழங்க கொமர்ஷல் வங்கி ஹோம்லேண்ட்ஸுடன் பங்குடைமை

Nov 24, 2025 - 10:58 AM -

0

வீட்டுக் கொள்வனவிற்கான 100% கடன் நிதியுதவி வழங்க கொமர்ஷல் வங்கி ஹோம்லேண்ட்ஸுடன் பங்குடைமை

இலங்கையின் வீட்டுக் கடன் துறையில் முன்னணி வங்கியாக திகழும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையர்கள் தமக்கு வீடொன்றினை உரிமையாக்கும் கனவினை நனவாக்குவதற்கு தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்காக, கொமர்ஷல் வங்கியானது ஹோம்லேண்ட்ஸ் ஸ்கைலைன் (பிரைவேட்) லிமிடெட் (Home Lands Skyline (Pvt) Ltd) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், அந்த நிறுவனம் உருவாக்கும் தொடர்மாடிக் குடியிருப்புகள் மற்றும் பாதுகாப்பு வசதி கொண்ட வீடுகளுக்காக வங்கியானது வசதியான கடன் திட்டங்களை வழங்கவுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின் படி, ஹோம்லேண்ட்ஸ் ஸ்கைலைன் நிறுவனம் வழங்கும் வீடுகளின் கொள்வனவு பெறுமதியில் 100% வரை வங்கியால் கடனுதவியாக வழங்கப்படும். இது கொள்வனவாளர்களுக்கான பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்தும் மும்முனை ஒப்பந்தங்கள் (tripartite agreements) மூலம் நடைமுறைப்படுத்தப்படும். 

கொமர்ஷல் வங்கியானது பல ஆண்டுகளாக இலங்கையர்களுக்கு வீட்டுக் கடன் துறையில் சேவை செய்து வருகிறது. நெகிழ்வான மீளச் செலுத்தும் தெரிவுகள், போட்டித்தன்மை வாய்ந்த வட்டி வீதங்கள் மற்றும் தொழில்துறையில் முன்னணி சேவை தரநிலைகள் ஆகியவற்றால் வலுப்படுத்தப்பட்ட கடன் வழங்கும் பிரிவினை கொண்டுள்ளது. 

இந்தப் புதிய பங்குடைமை தொடர்பாக கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சனத் மனதுங்க: 'நம்பகமான அபிவிருத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இலங்கையர்களுக்கு வீட்டு உரிமை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதே எமது நோக்கமாகும். ஹோம் லேண்ட்ஸ் ஸ்கைலைன் உடனான இந்தப் பங்குடைமையானது, எமது வீட்டுக் கடன் பிரிவினை தொடர்ந்து வளர்ச்சியடையச் செய்து வரும் அதே வேளையில், பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யவும், பல்வேறு பிரிவுகளைச் சென்றடையவும் எமக்கு உதவுகிறது. 

ஹோம் லேண்ட்ஸ் குழுமத்தின் தலைவரும் முகாமைத்துவப்பணிப்பாளருமான திரு. நளின் ஹேரத் இது தொடர்பாக தெரிவிக்கையில்: 'இந்த முயற்சியின் மூலம் கொமர்ஷல் வங்கியுடனான எமது நீண்டகால பங்குடைமையை மேலும் வலுப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அதிக வருமானத்தை எதிர்பார்க்கும் ஆர்வமுள்ள வீட்டு உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், மக்கள் வாழும் முறையை மேம்படுத்தும் நவீன வாழ்க்கை முறை இடங்களை உருவாக்குவதற்கான எமது நோக்கத்தைத் தொடரவும் இது எமக்கு உதவுகிறது. 

இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. 

மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05