வணிகம்
தேயிலை உற்பத்தியாளர் நிதி திட்டம் மூலம் இலங்கையின் தேயிலைத் துறையை வலுப்படுத்தும் NDB வங்கி

Nov 24, 2025 - 11:19 AM -

0

தேயிலை உற்பத்தியாளர் நிதி திட்டம் மூலம் இலங்கையின் தேயிலைத் துறையை வலுப்படுத்தும் NDB வங்கி

National Development Bank PLC (NDB) ஆனது தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தமது செயல்பாடுகளை விஸ்தரிக்கவும் , சர்வதேச சந்தைகளில் வளர்ச்சியடையவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு நிதி தீர்வான தேயிலை உற்பத்தியாளர் நிதி திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கையின் ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் துறைகளுக்கு தொடர்ந்து வலு சேர்க்கிறது. 

இலங்கையின் மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொழில்களில் ஒன்றான தேயிலைத் துறையானது, நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் மையமாக இருந்து, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை தாங்கி, அதின் ஒப்பற்ற தரத்திற்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்நிலைக்கு மேலும் பெறுமதி சேர்க்கும் வகையில் NDB வங்கியானது உற்பத்தித் திறன், தரநிலை, மற்றும் சர்வதேச போட்டித் திறனை மேம்படுத்தும் வகையில் நியாயமான நிதியைப் பெறுவதற்காக, தேயிலை உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை ஆதரிக்கும் இந்த தனிப்பயன் நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த திட்டத்தின் கீழ், அதிக செலவான குறுகிய கால கடன்களை மாற்றிக் கொள்ள குறைந்த வட்டியுடனான நிதியுதவியை வர்த்தகங்கள் பெற முடியும். பொருட்கள் பெறப்பட்டதற்கான குறிப்புகளின் (GRNs) அடிப்படையில் உடனடி கடன் வழங்கல் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட ஆவணப்படுத்தல் முறைகள் மூலம் தடையற்ற அனுபவம் கிடைக்கிறது. எந்த அளவிலான தேயிலை தொழிற்சாலைகளுக்கும், தமது செயல்பாட்டு தேவைகளின் அடிப்படையில் தொழில் மூலதனம் அல்லது நீண்டகால நிதி வசதிகளைப் பெறும் வகையில், இந்த திட்டம் முழு நெகிழ்வுத் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த முயற்சி தொடர்பாக NDB வங்கியின் – SME, நடுத்தர சந்தைகள் மற்றும் வர்த்தக வங்கிப் பிரிவுகளின் துணைத் தலைவர் இந்திக ரணவீர கருத்து தெரிவிக்கையில் : 

“இலங்கையின் தேயிலைத் துறை எப்போதும் எமது தேசிய பொருளாதாரத்தின் ஒரு வலுவான தூணாக இருந்து வந்துள்ளது. தேயிலை உற்பத்தியாளர் நிதி திட்டத்தின் மூலம், உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தங்களது செயல்பாடுகளை நவீனப்படுத்தவும், புதுமைகளை அறிமுகப்படுத்தவும், உலகளவில் போட்டியிடவும் தேவையான நிதி ஆதரவை வழங்குவதே எமது நோக்கமாகும். அவர்கள் கடின உழைப்பால் பெற்ற அறுவடைகளை நீடித்த மரபுகளாக மாற்றுவதற்கு உதவுவது எமது கடமையாகும்.” 

இந்த திட்டமானது , இலங்கையின் ஏற்றுமதியாளர்களையும் உற்பத்தியாளர்களையும் அணுகத்தக்க மற்றும் நோக்கு நோக்கிய நிதி தீர்வுகளின் மூலம் வலுப்படுத்தும் NDB வங்கியின் விரிவான நோக்கத்துடன் இணக்கமாக உள்ளது. கடந்த ஆண்டுகளில், தொழில் முனைவோருக்கு ஆதரவான சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களை புத்துயிர் அளிப்பதற்கான கடன் திட்டமான SME Re-Energizer Loan Scheme, பசுமைத் தொழில்களை ஊக்குவிக்கும் E-Friends II Refinance Facility, மற்றும் நாடு முழுவதும் வர்த்தகங்களுக்கு சர்வதேச சந்தைகளை அணுகுவதற்கான அறிவும் திறன்களும் வழங்கும் Exporter Forums போன்ற பல தாக்கமிக்க முயற்சிகளை வங்கி செயல்படுத்தியுள்ளது. 

NDB வங்கியானது இந்த மூலோபாய முயற்சிகளின் மூலம், ஏற்றுமதி வருவாயை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் தேசிய முன்னேற்றத்திற்கும் பங்களிக்கும் தொழில்களை வலுப்படுத்தி, இலங்கை நிறுவனங்களுக்கு நம்பகமான பங்காளராக தொடர்ந்து திகழ்கிறது. 

இலங்கையில் பட்டியலிடப்பட்ட நான்காவது பெரிய வணிக வங்கி NDB வங்கியாகும். 2025 ஆம் ஆண்டுக்கான யூரோமணி விருதுகளுக்கான சிறப்பு விருதுகளில், SME-களுக்கான இலங்கையின் சிறந்த டிஜிட்டல் வங்கியாக NDB பெயரிடப்பட்டது, மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிய வங்கி மற்றும் நிதி இதழ் (சிங்கப்பூர்) விருதுகளால் ஆண்டின் உள்நாட்டு சில்லறை வங்கி - இலங்கை மற்றும் இலங்கை உள்நாட்டு திட்ட நிதி வங்கி விருதை வென்றது. NDBஆனது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும், இதில் மூலதன சந்தை துணை நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து ஒரு தனித்துவமான வங்கி மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகின்றன. டிஜிட்டல் வங்கி தீர்வுகளால் இயக்கப்படும் அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்த வங்கி உறுதிபூண்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05