Nov 24, 2025 - 01:36 PM -
0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 200 ரூபாவால் அதிகரித்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தும், அதனை எதிர்க்கும் எதிர்க்கட்சிக்குக் கண்டனம் தெரிவித்தும் புஸ்ஸல்லாவ பகுதியில் இன்று (24) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
புஸ்ஸல்லாவ, மெல்பொட் பாலத்திற்கு அருகிலிருந்து பேரணியாக வந்த மக்கள், புஸ்ஸல்லாவ பொது பஸ் தரிப்பிடத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
--

