வணிகம்
ஜனசக்தி லைஃப், அதன் சிறந்த ஊழியர்களுக்கு Bali யில் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கியது

Nov 24, 2025 - 02:17 PM -

0

ஜனசக்தி லைஃப், அதன் சிறந்த ஊழியர்களுக்கு Bali யில் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கியது

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமான ஜனசக்தி லைஃப், உயர் செயல்திறனை வெளிப்படுத்திய அதன் ஊழியர்களுக்கு அண்மையில் இந்தோனேசியாவின் “Bali”யில் மறக்க முடியாத அனுபவத்தை அளித்தது. இந் நிகழ்வு காப்புறுதி துறையில் தனது 31ஆவது வருட பூர்த்தியை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும். 

இந்த முயற்சி, வெற்றியை கொண்டாடும் செயல்திறன் மிக்க மக்களை கொண்ட கலாசாரத்தை உருவாக்குவதில் ஜனசக்தி லைஃப் காட்டும் உறுதியை வெளிப்படுத்துகிறது. இது வெற்றியை கொண்டாடவும், எதிர்கால வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கவும், நிறுவனத்தின் சாதனை மற்றும் ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்தவும் உதவுகிறது. 

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி பற்றி 

1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றது. நாடு முழுவதிலும் உறுதியான பிரசன்னத்தை ஜனசக்தி லைஃப் கொண்டுள்ளதுடன், பரந்த 76 கிளைகள் மற்றும் பிரத்தியேகமான அழைப்பு நிலையத்தையும் கொண்டுள்ளது. “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05