Nov 24, 2025 - 02:20 PM -
0
கல்வி என்பது தேசிய அபிவிருத்தியின் அத்திவாரமாகக் காணப்படும் ஒரு காலகட்டத்தில், ஒரு கல்வி நிறுவனமாக இருப்பதன் அர்த்தத்திற்கு SLIIT மீள்வரைவிலக்கணம் வகுத்து வருகின்றது. விரிவுரை மண்டபங்கள் மற்றும் ஆய்வுகூடங்களுக்கு அப்பால், நாடெங்கிலும் பாடசாலை வகுப்பறைகளை எட்டி, பல்லாயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு அறிவு, திறன்கள், மற்றும் உத்வேகத்தை SLIIT கொண்டு வருகின்றது. கணினி, பொறியியல், வணிக, மனிதாபிமான மற்றும் அறிவியல், மற்றும் கட்டடக்கலை பீடங்களின் ஒத்துழைப்புடன் இணைந்து நடாத்தப்படும் பாடசாலை விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், அடுத்த தலைமுறையை கற்பனாசக்தி, புத்தாக்கம், மற்றும் உருவாக்கும் ஆற்றல் ஆகியவற்றுடன் வலுவூட்டுகிறது.
இந்நிகழ்ச்சித்திட்டங்கள் ரோபோக்கள் குறித்த நேரடி பாடசாலை செயலமர்வுகள், புள்ளி விபரங்கள் குறித்த இடைத்தொடர்பாடல் அமர்வுகள், மற்றும் புதிய திறன்கள் மற்றும் வாய்ப்புக்களைக் கண்டறிவதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பல வகைப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. இந்த பாரிய அளவிலான விளைவு இளம் வயதிலேயே திறமைகளை வளர்த்து, சமுதாயத்திற்கு பிரதியுபகாரம் ஆற்றும் SLIIT ன் இலக்கினை பிரதிபலிக்கின்றது. கம்பஹா முதல் மாத்தறை வரை, நீர்கொழும்பு முதல் கண்டி வரை, கொழும்பு முதல் குருணாகல் வரை நகர மற்றும் கிராமப் புறங்கள் எங்கிலும் இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் பரவியுள்ளது. சாதாரண தரம், உயர் தரம், மற்றும் இடைமட்ட பாடசாலைத் தரங்களைச் சேர்ந்த மாணவர்கள், வகுப்பறைக் கற்றலை யதார்த்த உலகின் பிரயோகங்களுக்குடன் இணைப்பதற்கான வலுவான அமர்வுகளில் பங்கேற்பதற்கு இவை வாய்ப்பளித்துள்ளன.
எதிர்காலத்தின் பரந்துபட்ட சவால்களை இந்நிகழ்ச்சித்திட்டங்கள் உள்ளடக்கியுள்ளன. செயற்கை நுண்ணறிவு, ரோபோக்கள், இணையப்பாதுகாப்பு, நிலைபேற்றியல் கொண்ட தொழில்நுட்பங்கள், உயிரியில் தொழில்நுட்பம், தலைமைத்துவத் திறன்கள், மற்றும் தொழில் வழிகாட்டல் சார்ந்த அதிநவீன அறிவு மற்றும் கருவிகள் தொடர்பான அனுபவத்தை மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். அதேசமயம், கல்வி முகாமைத்துவம், படைப்பாற்றல், புத்தாக்கம், மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற திறன்கள் தொடர்பான அமர்வுகள் பாடசாலைக்கு அப்பால் வாழ்வின் யதார்த்தங்களுக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள அவர்களுக்கு உதவியுள்ளன. கல்வி மற்றும் தொழில் ரீதியாக வெற்றி காண்பதற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் அதேசமயம், அவர்களுடைய தனிப்பட்ட மேம்பாட்டையும் வளர்ப்பது ஆகியவற்றைக் கொண்ட அதன் இரட்டை நோக்கம் இம்முயற்சியை மிகவும் போற்றத்தக்கதாக மாற்றியுள்ளது. படைப்பாற்றல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், மற்றும் தகவமைப்புத்திறன், 21 வது நூற்றாண்டு பிரஜைகளுக்கு அத்தியாவசியமான திறன்கள் ஆகியவற்றை வளர்க்கும் வகையில் கற்கைபீடங்களின் அங்கத்தவர்கள் அமர்வுகளை வடிவமைத்திருந்தனர். திறன் கல்விக்கான செயற்கை நுண்ணறிவாகட்டும், ரோபோக்களின் அறிமுகமாகட்டும், அல்லது தொழில்நுட்பத்தில் எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்களாகட்டும், நிகழ்ச்சித்திட்டம் ஒவ்வொன்றும் இலட்சியங்களுக்கும், வாய்ப்புக்களும் இடையில் ஒரு பாலமாக அமையப்பெற்றன.
இந்த விழிப்புணர்வு அமர்வுகள் சமத்துவம் மற்றும் அரவணைப்பு ஆகியவற்றையும் வலியுறுத்தின. மாணவர்களுக்கு அரிதாகக் கிடைக்கும் இத்தகைய வாய்ப்புக்களுடன் அவர்களுக்கு அனுபவத்தை வழங்கும் வகையில் வல்லுனர்கள் தலைமையிலான அமர்வுகள் கொழும்பிற்கு வெளியிலுள்ள பல பாடசாலைகளுக்கு பயனளித்துள்ளன. இதன் மூலமாக, எந்த இடத்தில் இருந்தாலும் திறமைமிக்க இளம் சிந்தனையாளர்கள் பாரிய கனவு காணவும், உயரிய இலக்குகளை அடையவும் தயார்படுத்தப்படுவதை SLIIT உறுதி செய்கின்றது. தொழில்நுட்ப அறிவிற்கு அப்பால், முழுமையான வளர்ச்சியை இந்நிகழ்ச்சித்திட்டங்கள் வலியுறுத்துகின்றன. தொழில் வழிகாட்டல் அமர்வுகள், உத்வேகமூட்டுகின்ற உரையாடல்கள், மற்றும் புத்தாக்கம் தொடர்பான நேரடி செயமலர்வுகள் ஆகியவற்றை நடாத்துவதன் மூலமாக, மாணவர்களை வெறுமனே உயர் கல்விக்கு தயார்படுத்துவது மாத்திரமன்றி, சமுதாயத்திற்குப் பங்களிப்பதற்குத் தயாரான பொறுப்புள்ள பிரஜைகளாக செயற்படுவதற்கும் SLIIT அவர்களைத் தயார்படுத்துகின்றது.
மிலாகிரிய புனித போல் மகளிர் பாடசாலை அதிபர் இந்நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து பிரதிபலித்து கருத்து வெளியிடுகையில், “SLIIT ஆல் நடாத்தப்படுகின்ற இந்த இடைச்செயற்பாட்டு செயலமர்வுகள், பாரம்பரிய வகுப்பறைக் கற்றலுக்கும் அப்பால், தேடல் ஆர்வம், படைப்பாற்றல், மற்றும் யதார்த்த உலகின் பிரயோகங்கள் குறித்த ஆழமான புரிந்துணர்வு ஆகியவற்றைத் தூண்டுகிறது. அனேகமான மாணவர்களுக்கு எதிர்காலத்திற்கு ஏற்ற திறன்கள் மற்றும் புத்தாக்கத்தை நோக்கிய முதற்படியை ஊக்குவிக்கும் வகையில் இவை அமைந்துள்ளன. அடுத்த தலைமுறை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தலைவர்களுக்கு வலுவூட்டுவதில் காண்பிக்கும் மனமுவந்த பங்களிப்பு மற்றும் ஓயாத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக SLIIT க்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நிகழ்வை வெற்றிகரமாக நடாத்துவதற்கு பேராதரவை வழங்கிய கல்வியமைச்சிற்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எதிர்காலத்தில் தொடர்ந்தும் ஒத்துழைப்பதற்கு ஆவலாக உள்ளோம்.”
இந்த கல்வி நிறுவனத்தின் கற்கைபீடம் முன்னெடுக்கின்ற Robofest, SoftSkills+, Mathfest, Scifest மற்றும் Codefest போன்ற முயற்சிகள் போட்டிமிக்க, ஆனால் ஆதரவளிக்கின்ற சூழல்களில் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப திறன்களைக் காண்பிப்பதற்கு பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கின்ற, மிகவும் வேண்டப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்களாக மாறியுள்ளன. இதனுடன் இணைந்து, SLIIT ன் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகள் அதன் இலக்கானது வெறுமனே பட்டதாரிகளை உருவாக்குவதற்கு அப்பாற்சென்று, சமுதாயத்திற்கு மதிப்பைத் தோற்றுவிப்பது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. எதிர்காலத்தைப் பொறுத்தவரை தனது வீச்சினை இன்னும் விரிவுபடுத்துவதற்கு SLIIT எண்ணியுள்ளது. இன்னும் பல மடங்கு எண்ணிக்கையில் பாடசாலைகள் மற்றும் மாணவர்களுடன் ஈடுபாடுகளை முன்னெடுத்து, இலங்கையில் அனைத்து சிறுவர்களுக்கும் கற்பதற்கான, புத்தாக்கத்தை வெளிக்கொண்டு வருவதற்கான, மற்றும் வளர்ச்சி காண்பதற்கான வாய்ப்புக்களுக்கு வழிமுறைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு இப்பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்புவதே SLIIT ன் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் மையமாகவுள்ளது.
இன்றைய இளைஞர்கள் மீது முதலீடுகளை மேற்கொள்வதனூடாக, நாளைய தலைவர்கள், புத்தாக்குனர்கள், மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்களை SLIIT வளர்க்கின்றது. வளர்ச்சிக்கான மிகவும் வலிமையான கருவியாக கல்வி திகழ்ந்து வருகின்ற ஒரு நாட்டில், உண்மையான வெற்றியானது பெறப்பட்டது அன்றி, அதனை மீண்டும் மற்றவர்களுக்கு கொடுக்கும் போதே அது அர்த்தமுள்ளதாக மாறுகின்றது என்ற நம்பிக்கையை சான்றாக SLIIT ன் முயற்சிகள் காணப்படுகின்றன.
எதிர்காலங்களுக்கு உத்வேகமளித்து, தலைமுறைகளுக்கு வலுவூட்டி, மற்றும் தேசத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற ஒரு இலட்சியமே, பல்கலைக்கழக சுவர்களுக்கும் அப்பால், இலங்கை எங்கிலும் சமூகங்களின் உள்ளங்களை எட்டுவதை நோக்கி SLIIT ஐ முன்னெடுத்துச் செல்கின்றது.

