Nov 24, 2025 - 02:25 PM -
0
நிலைபேறான கழிவு முகாமைத்துவத்தில் இலங்கையின் முன்னணி நிறுவனமான INSEE Ecocycle Lanka (Pvt) Limited, Plastic Pollution Reduction Standard (PPRS)இன் கீழ் சான்றிதழைப் பெற்ற நாட்டின் முதல் நிறுவனமாக, தேசிய அளவில் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது. PPRS என்பது வெளிப்படையான, கண்டறியக்கூடிய மற்றும் சரிபார்க்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவு குறைப்பை உறுதிப்படுத்தி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு மூன்றாம் தரப்பால் தணிக்கை செய்யப்பட்ட அமைப்பாகும்.
இந்த சான்றிதழ், சுற்றுச்சூழல் நடவடிக்கைக்கான INSEE Ecocycleஇன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதுடன் வளர்ந்து வரும் தேசிய விதிமுறைகளுக்கு இணங்குவதில் ஒரு முன்னோடி நிறுவனமாக அதனை நிலைநிறுத்துகிறது. இத் திட்டங்கள் புத்தளம் Ecocycle மையத்தில் மீள்சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகளை இணைந்து செயலாக்குதல் மற்றும் மல்வானை மையத்தில் உள்ள வள மீட்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியது. இவ் முன்முயற்சிகள் மீள்சுழற்சி செய்யக்கூடிய மற்றும் மீள்சுழற்சி செய்ய முடியாத இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய அளவிடக்கூடிய, சுயாதீனமாக சரிபார்க்கப்பட்ட செயல்முறையை உறுதி செய்து பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கையாள்வதில் Ecocycleஇன் தலைமைத்துவத்தை பிரதிபலிக்கின்றன.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சரிபார்ப்பு மற்றும் உறுதிப்படுத்தல் நிறுவனமான Control Union Philippinesஇன் கடுமையான மதிப்பீட்டைத் தொடர்ந்து இரண்டு திட்டங்களும் PPRSஇன் கீழ் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டன. ஆகஸ்ட் 26, 2025 அன்று வழங்கப்பட்ட இச் சான்றிதழ்கள் இணக்கத்தை உறுதி செய்வதற்காக சர்வதேச தரநிலைகளுக்கு எதிராக வருடந்தோறும் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படும்.
PPRS கட்டமைப்பு ISO தர அமைப்புகளுடன் ஒப்பிடத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது. இது பிளாஸ்டிக் கழிவுகளின் நிலைபேறான முகாமைத்துவம் மற்றும் அகற்றல் அல்லது வள மீட்டெடுப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில் இரட்டை எண்ணுதலை தடுத்து மதிப்புச் சங்கிலி முழுவதும் துல்லியமான அறிக்கையிடல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்கிறது.
இந்த முயற்சி இலங்கையின் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்திற்கான தேசிய முன்னுரிமைகளை நேரடியாக ஆதரிப்பதுடன் வரவிருக்கும் விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) சட்டத்துடன் இணங்குகின்றது. INSEE Ecocycle, ஒழுங்குமுறை கட்டமைப்புடன் முன்கூட்டியே இணைந்து எதிர்கால இணக்கத் தேவைகளை பூர்த்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஒரு ஆயத்த பொறிமுறையை வழங்குகிறது. தன்னார்வ சான்றிதழைப் பெறுவதில் நிறுவனத்தின் முன்னிலை, கழிவு முகாமைத்துவத் துறையில் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் அதன் நிலையை நிரூபிக்கிறது.
சான்றிதழைப் பெறுவதற்கு மேலதிகமாக தேசிய நிலைபேறாண்மைக்கான INSEE Ecocycleஇன் பங்களிப்பு மிகப் பரந்தது. நிறுவனம், ஏற்கனவே இலங்கை முழுவதும் 100இற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி சபைகளில் இருந்து கழிவுகளை சேகரித்து பொறுப்பான கழிவு முகாமைத்துவத்திற்கான தேசிய அமைப்பிற்கான செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது. இந்த சான்றளிக்கப்பட்ட திட்டங்கள் புதிய சர்வதேச தரநிலைகளை இத் துறையில் ஒருங்கிணைக்க உதவுவதுடன் கண்காணிப்பை மேம்படுத்துகின்றன. மேலும் இவை சுழற்சிப் பொருளாதாரத்திற்கு இலங்கை மாறுவதில் நம்பகமான பங்காளியாக INSEE Ecocycleஐ நிலைநிறுத்துகிறது.
மேலும் PPRS சந்தையானது, சான்றளிக்கப்பட்ட திட்டங்களை உறுதிப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் மீட்பு முயற்சிகளை ஆதரிக்க விரும்பும் வணிகங்களுடன் இணைக்கிறது. இதனால் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைப்பதற்கான கூட்டுப் பணியில் நிலைபேறாண பங்காளர்களாக இணைய முடிகிறது.

