Nov 24, 2025 - 02:48 PM -
0
பொலிவுட்டின் பழம்பெரும் நடிகரான தர்மேந்திரா தமது 89 வது வயதில் இன்று (24) காலமானார்.
சில நாட்களுக்கு முன்னதாக உடல்நலக் குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வௌியாகியிருந்தன.
எனினும் அதனை அவரது குடும்பத்தினர் மறுத்திருந்தனர்.
இதனிடையே, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தனது எக்ஸ் கணக்கில் தெரிவித்தார்.
இதனையடுத்து, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை தேறியதால் மும்பை தனியார் வைத்தியசாலையில் இருந்து அவர் இன்று வீடு திரும்பிய நிலையில் வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனை அறிந்து பல்வேறு திரை பிரபலங்கள் தர்மேந்திராவை காண அவரது வீட்டிற்கு சென்று வரும் நிலையில் இதனால் தர்மேந்திரா வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

