Nov 24, 2025 - 04:04 PM -
0
தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும் சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் உருவாக்கங்கள் குறைவாகவே இருக்கின்றன.
மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸை வைத்து ‘மின்னல் முரளி’ திரைப்படத்தை எடுத்து வெற்றிப்படமாக்கினர்.
தேசிய விருது வென்ற ‘பார்க்கிங்’படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனம் அர்ஜுன்தாஸின் புதிய படத்தை தயாரிக்கிறது.
படத்தை விக்னேஷ் வேணுகோபால் இயக்குகிறார். நடிகை தேஜு அஷ்வினி, சாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விருக்கிறார்கள்.
இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்திற்கு ‘சூப்பர் ஹீரோ’என பெயரிடப்பட்டுள்ளது. ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
இதன், படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இது சூப்பர் ஹீரோ கதையாக இருக்கலாம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

