Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
உலகளாவிய மின்கல முன்னோடி CATL, இலங்கையில் நிலைபேறான போக்குவரத்திற்கான Evolution Auto நிறுவனத்தின் இலக்கிற்கு வலுவூட்டுகிறது

Nov 25, 2025 - 02:10 PM

உலகளாவிய மின்கல முன்னோடி CATL, இலங்கையில் நிலைபேறான போக்குவரத்திற்கான Evolution Auto நிறுவனத்தின் இலக்கிற்கு வலுவூட்டுகிறது
Mobitel Inner 1278

உலகளாவிய ரீதியில் மின்சார வாகன (EV) மின்கலங்களின் முன்னணி உற்பத்தியாளரும், புத்தாக்கவியலாளருமான Contemporary Amperex Technology Co. Limited (CATL) இன் தலைமையில், நிலைபேறான போக்குவரத்திற்கான உலகளாவிய கேள்வி தொடர்ச்சியாக துரிதப்படுத்தப்படுகிறது. உலகளாவிய ரீதியில் EV மின்கலங்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் 42.81% எனும் சந்தைப் பங்கை கொண்டுள்ள CATL ஆனது, Tesla, BMW, Mercedes-Benz போன்ற முன்னணி வர்த்தகநாமங்கள் உள்ளிட்ட, உலகெங்கிலும் உள்ள அனைத்து மின்சார வாகனங்களினதும் சுமார் அரைவாசிக்கு இது மின்கலங்களை வழங்குகிறது. 

Evolution Auto (Pvt) Ltd நிறுவனத்தால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்களில் இந்த உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம், இலங்கையின் மின்சாரப் போக்குவரத்திற்கான மாற்றத்தில் புதிய தரநிலைகளை தற்போது அமைத்து வருகிறது. இதில் Avatr 11, Geely Ridara RD6 Pickup, King Long Kingwin+ (இவை அனைத்தும் CATL மின்கலங்களால் இயங்குபவை), அத்துடன் XPENG, IM Motors, KYC Vans, King Long Electric Vans போன்ற பல்வேறு மேம்பட்ட சீன மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கான உள்ளூர் பிரதிநிதித்துவமும் உள்ளடங்குகின்றன. 

உறுதிப்படுத்தப்பட்ட செயல்திறன் மற்றும் இடைவிடாத புத்தாக்கம் ஆகியன CATL இன் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. சிறந்த செயல்திறன், விரைவான சார்ஜிங் மற்றும் அதிக சூழல் நிலைபேறான தன்மையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சோடியம்-அயன் மற்றும் திண்ம நிலை மின்கலங்கள் (sodium-ion and solid-state batteries) போன்ற அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை கொண்டு இவை உருவாக்கப்படுவதுடன், மின்கல செயல்திறன், வலுசக்தி அடர்த்தி, பாதுகாப்பு ஆகியவற்றிலான முன்னேற்றங்களுக்கு நிறுவனம் வழி வகுத்துள்ளது. 

இலங்கைக்கு, இந்த உலகளாவிய தொழில்நுட்பம் என்பது செயல்திறன், நம்பகத்தன்மையை காண்பிக்கிறது. உலகளாவிய ரீதியில் சிறந்த வாகன வர்த்தக நாமங்களால் பயன்படுத்தப்படும் அதே நம்பகமான தொழில்நுட்பமான CATL மின்கல தொகுதியுடன் கூடிய மின்சார வாகனங்களை தற்போது Evolution Auto நிறுவனத்திடமிருந்து இலங்கை நுகர்வோர் கொள்வனவு செய்ய முடியும். 

இது குறித்து, Evolution Auto (Pvt) Ltd நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி விரான் டி சொய்சா தெரிவிக்கையில், "CATL போன்ற உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கூட்டுசேர்வதானது, இலங்கை மின்சாரப் போக்குவரத்தை தழுவும் இவ்வேளையில், எமது நுகர்வோர் மிக உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்பைப் பெறுவதை உறுதி செய்கிறது. CATL கொண்டுள்ள நிரூபிக்கப்பட்ட மின்கல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நாம் பெருமை அடைகிறோம். இது தரத்தில் எவ்வித குறையும் இன்றி, நிலைபேறான முறையில் வாகனங்களை இலங்கையர்கள் செலுத்த உதவுகிறது." என்றார். 

இலங்கையானது, காபன் வெளியீடு மற்றும் எரிபொருளில் தங்கியிருப்பதை குறைப்பதில் கவனம் செலுத்துவதால், Evolution Auto ஊடான CATL இன் வரவானது, இலங்கையின் பசுமை போக்குவரத்து பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைகிறது. புத்திசாலித்தனமான, தூய, வலுசக்தித் திறன் அதிகம் கொண்ட போக்குவரத்திற்கான எதிர்காலத்தை உருவாக்க அவர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகிறார்கள். 

CATL இன் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு, Evolution Auto தொடர்ச்சியாக ‘பூச்சிய காபன் வெளியேற்றும் இலங்கை’ எனும் எண்ணக்கருவை ஆதரிக்கிறது. இங்கு வளர்ச்சியானது, புத்தாக்கம் மூலம் தூண்டப்படுவதுடன் ஒவ்வொரு பயணமும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்க உதவுகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

Mobitel 1278