வணிகம்
பரந்தளவிலான விற்பனை நிலையங்களில் 70% வரையான விலைக்கழிவுடன் பண்டிகை மாயாஜாலத்தை கொண்டு வரும் கொம்பேங்க் அட்டைகள்

Nov 25, 2025 - 03:43 PM -

0

பரந்தளவிலான விற்பனை நிலையங்களில் 70% வரையான விலைக்கழிவுடன் பண்டிகை மாயாஜாலத்தை கொண்டு வரும் கொம்பேங்க் அட்டைகள்

கொமர்ஷல் வங்கியானது, வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு முழுவதும் மிகச் சிறந்த சலுகைகளை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், இந்த ஆண்டின் மிகப்பெரிய அட்டை ஊக்குவிப்புடன் பண்டிகைக் காலத்தை ஆரம்பிக்கிறது. இதற்கிணங்க கொமர்ஷல் வங்கியானது கடனட்டை மற்றும் வரவு அட்டை வைத்திருப்பவர்களுக்கு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விற்பனை நிலையங்களைக் கொண்டமைந்துள்ள 642க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களில் 70% வரையிலான விலைக்கழிவுகளை வழங்குகிறது. 

நவம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை இடம்பெறவுள்ள ஒரே ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், ஆடை மற்றும் அணிகலன்கள், ஆபரணங்கள், பாதணிகள் மற்றும் தோல் ஆடைகள், நகைகள், வாழ்க்கை முறை பொருட்கள், மற்றும் அழகுசாதனப் பொருட்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஆபரணங்கள், இணையவழி விற்பனையாளர்கள், பல்பொருள் அங்காடிகள், சுகாதாரம், உணவு, வாகன மற்றும் உதிரிப்பாகங்கள், ஹோட்டல்கள், புத்தகக் கடைகள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் பிரத்தியேக சேமிப்புகளைக் கொண்டுள்ளது. வெள்ளைப் பொருட்களை கொள்வனவு செய்யும்போது 60 மாதங்கள் வரையிலான இலகுவான கட்டணத் திட்டங்கள் மூலமும் அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இவற்றுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தகர்களிடம் இருந்து தமது கட்டணங்களை தவணைத் திட்டங்களாக மாற்ற வங்கியின் அழைப்பு மற்றும் மாற்று வசதியையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம், அதே நேரத்தில் பிரீமியம் அட்டை வைத்திருப்பவர்கள் அவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சலுகைகளைப் பெறுவார்கள். 

இந்த ஊக்குவிப்பு தொடர்பாக கொமர்ஷல் வங்கியின் பிரதிப்பொது முகாமையாளர் -தனிநபர் வங்கி சேவைகள் பிரிவு திரு. எஸ். கணேசன் தெரிவிக்கையில் டிசம்பர் மாத ஊக்குவிப்புத் திட்டங்களில் அட்டை ஊக்குவிப்பானது எமது வருடாந்த நாட்காட்டியில் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த கொள்வனவு அனுபவத்தை வழங்குவதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான வர்த்தக பங்குதாரர்களுடன் இணைந்துள்ளோம். அவர்கள் இந்தப் பண்டிகைக் காலத்தை கொண்டாடும் போது, அர்த்தமுள்ள சேமிப்புகளையும் வசதிகளையும் அனுபவிக்க முடியும். இந்த ஆண்டின் ஊக்குவிப்புத் திட்டமானது, எந்த ஒரு வங்கியின் அட்டைதாரர்களுக்கும் கிடைக்கக்கூடிய அதிகபட்ச பருவகால சலுகைகளை கொண்டதாக இருப்பதாகவும் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த மதிப்பும் இணையற்ற வசதிகளும் வழங்கும் வங்கியின் உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்துவதாக இருப்பதாகவும் திரு. எஸ். கணேசன் தெரிவித்தார்.இந்த முயற்சி, தற்போதைய வாடிக்கையாளர்களை மட்டுமல்லாமல் புதிய அட்டைதாரர்களையும் ஈர்க்கின்றது. மேலும் நாடு முழுவதும் அட்டைதாரர்களின் முதன்மைத் தேர்வாக வங்கியின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. 

இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. 

மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05