Nov 26, 2025 - 11:40 AM -
0
கண்டியில் உள்ள புனித தலதா மாளிகை வளாகத்தில் தனது புதிய ATM இயந்திரத்தை திறந்து வைத்ததில் செலான் வங்கி பெருமையடைகிறது. அனைவரும் அணுகக்கூடிய, சௌகரியமான சேவையை வழங்குவதற்கான செலான் வங்கியின் நோக்கத்தின் மற்றொரு மைல்கல்லை ஜூலை 18, 2025 அன்று நடைபெற்ற இத் திறப்பு விழா குறிக்கிறது.
இலங்கையில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் அடிக்கடி பார்வையிடப்படும் இடம் ஒன்றில் மூலோபாய ரீதியாக அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ATM, உள்ளூர் பக்தர்களுக்கும் தினமும் தலதா மாளிகைக்கு வருகை தரும் பல சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனுடையதாக அமையும். மேலும் அவர்களுக்கு வசதியாக, தேவைப்படும் இடத்தில் வங்கிச் சேவைகளை எளிதாகவும், நம்பகமானதாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

