Nov 26, 2025 - 01:59 PM -
0
Google மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவுகளில் உலகளாவிய முன்னிலையாளரான வீசா ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், Google Wallet அறிமுகத்தின் ஒரு அங்கமாக, தனது அட்டை வாடிக்கையாளர்களுக்கு Google Pay தொழில்நுட்பத்திற்கு நாட்டில் இடமளித்துள்ள முதலாவது வங்கியாக மாறி கொமர்ஷல் வங்கி சாதனை படைத்துள்ளது. பாதுகாப்பாகவும் மற்றும் சௌகரியமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை முன்னெடுப்பதில் புதிய தராதரத்தை நிலைநாட்டி, இலங்கையின் நிதியியல் துறையில் ஒரு திருப்புமுனையாக இது மாறியுள்ளது.
இலங்கையில் தனது வீசா அட்டைதாரர்களுக்கு Google Pay தொழில்நுட்பத்திற்கு இடமளிக்கின்ற ஒரேயொரு வங்கியாக கொமர்ஷல் வங்கி மாறியுள்ளதுடன், இந்த உலகத்தரம் வாய்ந்த கைபேசிக் கொடுப்பனவுத் தீர்வின் நன்மையை முதன்முதலாக அனுபவிக்கும் வாய்ப்பினை பிரத்தியேகமாக தனது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்துள்ளது. வீசாவின் நம்பிக்கைமிக்க சர்வதேச வலையமைப்பு மற்றும் நவீன பெயரளவுப் பண முறை (tokenization) தொழில்நுட்பத்தையும், Google ன் பாதுகாப்பான மற்றும் உள்ளுணர்வு மிக்க இடைமுகம், மற்றும் கொமர்ஷல் வங்கியின் வலுவான டிஜிட்டல் வங்கிச்சேவைக் கட்டமைப்பு ஆகியவற்றை இந்த ஒத்துழைப்பானது இடையறாது ஒருங்கிணைக்கின்றது.
கொமர்ஷல் வங்கியின் வீசா வரவு மற்றும் கடன் அட்டைதாரர்கள் தற்போது மிகவும் எளிதாக தமது அட்டைகளில் Google Wallet ஐச் சேர்த்துக் கொள்ள முடிவதுடன், ஒரு முறை உபயோகிக்கும் கடவுச்சொல் (one-time password - OTP) வழியாக உறுதிப்படுத்தி, அல்லது அழைப்பு மையத்தினூடாக சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் வீசா ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அனைத்து இடங்களிலும், தொடுகையின்றிய பயன்பாட்டுக்கு இடமளிக்கப்பட்டுள்ள எந்தவொரு Point-of-Sale (POS) முனையத்திலும், மிக இலகுவாக தட்டுவதனூடாக, கொடுப்பனவுகளை பாதுகாப்பாகவும், தொடுகையின்றியும் மேற்கொள்வதற்கு தமது Android ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அட்டைதாரர்கள் இனிமேலும் பௌதிக வடிவிலான அட்டைகளையோ அல்லது பணத்தையோ சுமந்து செல்ல வேண்டிய தேவையின்றி, NFC தொழில்நுட்பத்தின் ஊடாக தமது Android ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி, தட்டுவதனூடாக கொடுப்பனவை மேற்கொள்ள முடிவதுடன், பாதுகாப்பான மற்றும் இலகுவான கொடுப்பனவு அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வீசாவின் Token Service (VTS) எனப்படும் பெயரளவுப் பண முறையின் அனுகூலத்துடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்காக, IDEMIA என்ற மூன்றாம் தரப்பு சேவை வழங்குனருடன் மூலோபாய ரீதியான ஒத்துழைப்பை கொமர்ஷல் வங்கி ஏற்படுத்திக் கொண்டுள்ளது. Tokenization எனப்படும் பெயரளவுப் பணமுறைத் தொழில்நுட்பமானது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உண்மையான 16-இலக்க அட்டை இலக்கத்திற்குப் பதிலாக, தனித்துவமான டிஜிட்டல் டோக்கன் ஒன்றுடன், பயனரின் தனிப்பட்ட தகவல் விவரங்கள் வணிகர்களுடன் பகிரப்படுவதையோ அல்லது சாதனத்தில் சேமிக்கப்படுவதையோ முற்றாக தவிர்த்துக்கொள்வதை உறுதி செய்கின்றது. மேலும், இத்தீர்வை அறிமுகப்படுத்துவதற்காக வங்கியின் அட்டை மாற்ற வழங்குனரான Euronet கொடுப்பனவு உட்கட்டமைப்பினை கொமர்ஷல் வங்கி பயன்படுத்துவது நம்பகமான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனை செயலாக்கத்திற்கு உத்தரவாதமளிக்கின்றது.
கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சனத் மனதுங்க அவர்கள் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கொடுப்பனவு அனுபவங்களை மேம்படுத்துவதில் நாம் தற்போது காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்பில் முக்கியமானதொரு மைல்கல்லாக வீசா மற்றும் Google ஆகியவற்றுடனான கூட்டாண்மை அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள மிகப் பாரிய தனியார் துறை வங்கி என்ற ரீதியில், எங்கேயும், எப்போதும் இடையறாத, பாதுகாப்பான, மற்றும் தொடுகையின்றிய பரிவர்த்தனைகளை வழங்கும் எமது ஆற்றலை இந்த ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்துகின்றது.
பெயரளவுப் பணமுறையான tokenization போன்ற சர்வதேச புத்தாக்க தொழில்நுட்பங்களைக் கைக்கொள்வதால், டிஜிட்டல் வங்கிச்சேவை மகத்துவத்தில் கொமர்ஷல் வங்கி தொடர்ந்தும் முன்னிலை வகிப்பதுடன், இலங்கையில் பணவடிவின்றிய பாவனை கொண்ட எதிர்காலத்தை வளர்ப்பதில் தீர்க்கமான பங்கு வகிக்கின்றது. இக்கூட்டாண்மையானது பல மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை மேம்படுத்துவது மாத்திரமன்றி, தொழில்நுட்பவியல்ரீதியாக இடமளிக்கும் நிதியியல் கட்டமைப்பை நோக்கி நாடு மாற்றம் பெறுவதையும் விரைவுபடுத்துகின்றது. உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் தீர்வுகளை இலங்கை நுகர்வோருக்கும் மற்றும் வணிகங்களுக்கும் கொண்டு வருவதில் வங்கியின் நீண்ட கால மூலோபாயத்தை இது பிரதிபலிக்கின்றது.”
இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான வீசா முகாமையாளரான அவாந்தி கொலம்பகே அவர்கள் இந்த கூட்டுப் பலன் குறித்துத் கருத்து தெரிவிக்கையில், “கொடுப்பனவு அனுபவத்தை பரிணமிக்கச் செய்யும் வகையில் Google Pay தீர்வை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்காக கொமர்ஷல் வங்கி மற்றும் Google ஆகியவற்றுடன் ஒத்துழைப்பதில் வீசா பெருமகிழ்ச்சி கொள்கின்றது.
இலங்கையின் கொடுப்பனவுத் துறையில் ஒரு திருப்புமுனையாக இந்த அறிமுகம் மாறியுள்ளதுடன், நாடெங்கிலுள்ள மக்களுக்கு வெறுமனே ஒரு ஸ்மார்ட்போனின் துணையுடன், விரைவான, கூடுதல் சௌகரியம் கொண்ட, மற்றும் பாதுகாப்பான கொடுப்பனவு அனுபவத்தைப் பெற்று மகிழ்வதற்கு வலுவூட்டுகின்றது. வீசாவின் நம்பிக்கைக்குரிய சர்வதேச வலையமைப்பு மற்றும் நவீன tokenization தொழில்நுட்பம், Google ன் பாதுகாப்பான, உள்ளுணர்வு மிக்க இடைமுகம், மற்றும் கொமர்ஷல் வங்கியின் வலுவான உள்நாட்டு பிரசன்னம் மற்றும் வலிமையான கட்டமைப்பு ஆகியன ஒன்றிணைந்து, வெறுமனே மற்றுமொரு கொடுப்பனவுத் தெரிவு என்பதற்கும் அப்பால், பல மில்லியன் கணக்கான இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை, சௌகரியம், மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவில் இணைந்து செயற்படும் ஆற்றல் ஆகியவற்றுக்கு இடமளிக்கின்ற, டிஜிட்டல் கொடுப்பனவுகளின் அடுத்த சகாப்தத்தை நாம் வளர்க்கின்றோம்.”
பல்வேறு கட்டங்களாக இது முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஆரம்பத்தில் குறிப்பிட்ட அட்டை வகைகளுக்கு இவ்வசதியைக் கிடைக்கச் செய்வதில் கவனம் செலுத்தப்படவுள்ளது. இலங்கையின் மிகப் பாரிய தனியார் துறை வங்கி, மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத்தில் முன்னோடி என்ற வகையில், Global Finance ஆல் இலங்கையின் Best Mobile Banking App என்ற அங்கீகாரத்தை கொமர்ஷல் வங்கி சம்பாதித்துள்ளது. நுகர்வோரின் நம்பிக்கையை வலுப்படுத்தி, டிஜிட்டல் வழிமுறைகளைக் கைக்கொள்வதை விரைவுபடுத்துவதற்கு tokenization மற்றும் அடுத்த தலைமுறை கொடுப்பனவுத் தொழில்நுட்பங்களின் அனுகூலத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதில் வங்கி மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளது.
வீசா குறித்த விவரங்கள்: டிஜிட்டல் கொடுப்பனவுகளில் உலகளாவில் முன்னிலை வகித்து வருகின்ற Visa (NYSE: V), 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் நுகர்வோர்கள், வணிகர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையில் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கு அனுசரணையளித்து வருகிறது. தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் வளம் காண்பதற்கு இடமளித்து, புத்தாக்கம் மிக்க, சௌகரியமான, நம்பிக்கைமிக்க, மற்றும் பாதுகாப்பான கொடுப்பனவுகள் வலையமைப்பினூடாக உலகினை இணைப்பதே எமது நோக்கம்.
அனைவரையும் எங்கேயும் உள்ளடக்கின்ற, அனைவரையும் எங்கேயும் மேம்படுத்துகின்ற பொருளாதாரங்கள் பணவியக்கத்தின் எதிர்காலத்திற்கான அத்திவாரத்திற்கான அணுகலைக் கொண்டுள்ளன என நாம் நம்புகின்றோம். மேலதிக விவரங்களுக்கு Visa.com.
தொடர்புகளுக்கு:
சந்தீபனி ரத்நாயக்க sandeepani@hardtalk.lk

