வணிகம்
eChannelling PLC சந்தைப்படுத்தல் சிறப்புக்காக SLIM வர்த்தக நாமச் சிறப்பு 2025 இல் வெள்ளி விருதை சுவீகரித்தது

Nov 26, 2025 - 02:01 PM -

0

eChannelling PLC சந்தைப்படுத்தல் சிறப்புக்காக SLIM வர்த்தக நாமச் சிறப்பு 2025 இல் வெள்ளி விருதை சுவீகரித்தது

டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழும் eChannelling PLC, சந்தைப்படுத்தல் சிறப்பைக் கொண்டாடும் நாட்டின் முன்னணி கட்டமைப்பான, SLIM வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் 2025 இல் ஆண்டின் சிறந்த ஒன்லைன் வர்த்தக நாமத்துக்கான வெள்ளி விருதை சுவீகரித்திருந்தது. 

இலங்கையின் வளர்ந்து வரும் சுகாதாரச் சூழலமைப்பை ஆதரிக்கும் நம்பகமான டிஜிட்டல் அங்கமாக, நோயாளிகள் மருத்துவ சேவைகளை அணுகும் விதத்தை eChannelling தொடர்ந்து மாற்றி அமைத்துள்ளது. புத்தாக்கம், சேவை நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் புத்தாக்கங்கள் மூலம், சௌகரியமான, வினைத்திறனான மற்றும் சமமான சுகாதாரப் பராமரிப்பு அணுகலை மில்லியன் கணக்கான இலங்கையர்கள் அனுபவிக்க இந்த நிறுவனம் வழிவகுத்துள்ளது. 

இந்த அங்கீகாரம் eChannelling வர்த்தகநாமத்தின் வலிமையையும், இலங்கையின் டிஜிட்டல் சுகாதாரத் துறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் எதிரொலிக்கிறது. சுகாதாரப் பராமரிப்புப் பாதையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் எளிதாக்குவதன் மூலம், eChannelling நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் சேவை வழங்குநர்களைத் தடையின்றி இணைக்கிறது. இது காலதாமதமற்ற பராமரிப்புக்கான நீண்டகால தடைகளை நீக்குவதுடன், நோயாளிகளின் திருப்தியையும் மேம்படுத்துகிறது. SLIM விருதை சுவீகரித்திருந்தமையினூடாக, நாடு முழுவதும் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுப்பதில் eChannelling இன் பங்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து இலங்கையர்களுக்கான சுகாதாரப் பராமரிப்பு அனுபவத்தை தொடர்ந்து உயர்த்துவதற்கு நிறுவனத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. டிஜிட்டல் புத்தாக்கம் மூலம் சுகாதாரப் பராமரிப்பானது அணுகக்கூடியதாகவும், நம்பகமானதாகவும் மற்றும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்வதே eChannelling இன் இலக்கு என்பதை இந்தச் சாதனை வெளிப்படுத்துகிறது. 

இந்த அங்கீகாரம், eChannelling வர்த்தகநாம நம்பகத்தன்மையை மேலும் மேம்படுத்தியுள்ளதுடன், புத்தாக்கம் மற்றும் சேவைச் சிறப்புக்கு ஒரு அளவுகோலாக அதனை நிலைநிறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரப் பராமரிப்பில் வசதி, அணுகல் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றைத் தொடர்ச்சியாக மேம்படுத்தும் ஒரு விருது பெற்ற டிஜிட்டல் தளத்தின் மீதான நம்பிக்கையை பலப்படுத்துகிறது. சமூகம் மற்றும் நாட்டிற்கு, டிஜிட்டல் சுகாதாரத் தீர்வுகளின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதுடன், அனைத்து குடிமக்களுக்கும் பயனளிக்கும் ஒரு வலுவான, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சுகாதாரப் பாதுகாப்புச் சூழலமைப்பை உருவாக்குவதற்கான இலங்கையின் தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கிறது. 

SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2024 இல், eChannelling ‘ஆண்டின் சிறந்த ஒன்லைன் வர்த்தகநாமம் – வெண்கல விருது’ ஐ வென்றது. SLIM Brand Excellence Awards 2025 நிகழ்வு, இலங்கையின் மிகச் சிறந்த சந்தைப்படுத்தல் சாதனைகள் மற்றும் வர்த்தகநாமக் கதைகளை காட்சிப்படுத்தியது. சந்தைப்படுத்தல் புத்தாக்கம், வர்த்தகநாமத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் வணிகத் தாக்கம் ஆகியவற்றில் உள்ள சிறப்பைக் கொண்டாடுவதற்காக இந்நிகழ்வில் முன்னணி சந்தைப்படுத்துபவர்களும் மற்றும் பெருநிறுவனத் தலைவர்களும் ஒன்று திரண்டிருந்தனர். eChannelling இன் சேவைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.echannelling.com பார்வையிடுங்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05