Nov 26, 2025 - 03:46 PM -
0
மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்த 'பிசாசு 2' படம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையே சமீபத்தில் 'மாஸ்க்' படத்தை தயாரித்து நடித்துள்ள நடிகை ஆண்டரியா, அந்த படம் லாபமாக அமைந்தால், அடுத்து பிசாசு 2 படத்தை வாங்கி வெளியிட முயற்சி செய்வேன் எனப் பேசியிருந்தார்.
அந்தளவிற்கு பிசாசு 2 படத்தை ஆண்ட்ரியா பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இந்த பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நிர்வாண காட்சி ஒன்றில் நடித்திருப்பதாக அப்போதே தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் அதுப்பற்றிய சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதில் ஆண்ட்ரியா கூறியதாவது: பிசாசு 2 படமே ஒரு பெண்ணை தான் பற்றி மிஷ்கின் எழுதுகிறார்.
அவர் பெரிய நடிகர்களுடனும் பணியாற்றி இருக்கிறார். அப்படியிருக்கும் நபர், ஒரு சோய்ஸாக தான் நிர்வாணக் காட்சியை கதையில் எழுதியிருந்தார்.
ஆனால் படப்பிடிப்பின் போது எழுதியிருந்த அந்த காட்சியை நீக்கிவிட்டார்.
படத்தில் சில கவர்ச்சியான காட்சிகள் இருந்தாலும் அவை ஆபாசமாக இருக்காது.
இந்த மாதிரியான காட்சியை வித்தியாசமான முறையில் எடுக்க வேண்டுமென மிஷ்கின் போன்ற இயக்குனர் கேட்டால், அவரின் நோக்கத்தை நான் நம்புவேன்'' என்றார்.
'ஆயிரத்தில் ஒருவன் 2' பற்றிய கேள்விக்கு, ''நான் வரலப்பா... அதெல்லாம் வாழ்க்கைல ஒரு தடவை தான் பண்ணணும்.
என் பேவரைட் பாடலான 'மாலை நேரம்' பாடல், அப்படத்தில் இடம்பெறவில்லை.
அப்படத்திற்கு அப்பாடல் வரவும் கூடாது. ஜி.வி.பிரகாஷ் தான், செல்வராகவனுடன் முதல் படம், ஒரு காதல் பாடல் வேண்டும் என கேட்டுக்கொண்டதால், அப்பாடலை பாடினோம்' என பதிலளித்தார் ஆண்ட்ரியா.

