Nov 26, 2025 - 06:53 PM -
0
ஹொங்கொங்கில் உள்ள உயரமான வீடமைப்பு வளாகம் ஒன்றில் இன்று (26) ஏற்பட்ட பயங்கர தீப்பரவலில் 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 28 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நகரின் தீயணைப்பு படையின் 100 வாகனங்களும் 700க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது
உயிரிழந்தவர்களில் ஒரு தீயணைப்பு வீரரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பயங்கர தீ, நகரத்தின் டாய் போ மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் நிர்மாணிக்கப்பட்டுவரும் மாடிக் கட்டிடத்தின் தீப்பரவல் ஏற்பட்டது.
பின்னர் ஏனைய கட்டிடங்களும் உடனடியாக தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

