Nov 27, 2025 - 08:48 AM -
0
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றை நுகேகொட பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய, அதன் சட்டபூர்வத்தன்மை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கடந்த நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடவில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தின் போது, அவரிடம் இந்தத் துப்பாக்கி இருந்ததாகக் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

