Nov 27, 2025 - 09:46 AM -
0
பிரிட்டிஷ் கவுன்சில், 2025 Connections Through Culture (CTC) Grant திட்டத்தின் பெறுநர்களை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத் திட்டம் ஐக்கிய இராச்சியம் மற்றும் சர்வதேச பங்காளர்களுக்கு இடையேயான புதிய கலை இணைவுகளை ஆதரிக்கின்றது.
இவ்வாண்டு இலங்கையிலிருந்து 6 திட்டங்கள் உட்பட உலகளாவிய ரீதியாக 127 திட்டங்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு திட்டமும் ஐக்கிய இராச்சியம் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கலைஞர்களையும் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், இணைந்து படைக்கவும், இன்றைய உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுக்கு புதிய தீர்வுகளை ஆராயவும் வாய்ப்பளிக்கிறது.
2025 உதவித்தொகை பெறுநர்கள், பாரம்பரிய கைவினைக்கு மறுவடிவம் கொடுத்தல் முதல் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் காலநிலை இடர்பாடுகளை காட்சி மற்றும் கதைசொல்லல் ஊடாக வெளிக் கொண்டுவரல் வரை மாற்றத்தை தூண்டும் கலைகளின் அசாதாரண திறனை புத்தாக்கம் மற்றும் உரையாடல் ஊடாக பிரதிபலிக்கின்றனர்.
2025ஆம் ஆண்டுக்கான ஒவ்வொரு திட்டமும், கலைஞர்கள் ஒன்றிணைதல், கருத்துக்களைப் பரிமாறுதல், புதியவற்றை முயற்சி செய்தல் மற்றும் கூட்டாக புதிதாக ஒன்றை உருவாக்குதல் தொடர்பானதாகும். இவ் இணைவுகள், கலைகள் பரஸ்பர பரிமாற்றத்தில் விருத்தியாகின்றன என்பதையும் மக்கள் கலாச்சாரங்களை கடந்து இணையும் போது அவர்கள் தங்கள் சொந்த சமூகங்களுக்கு அப்பாற்பட்டு எதிரொலிக்கும் படைப்புகளை உருவாக்குகிறார்கள் என்பதையும் நமக்கு நினைவூட்டுகின்றன. என பிரிட்டிஷ் கவுன்சிலின் நாட்டுக்கான பணிப்பாளர் ஆர்லாண்டோ எட்வர்ட்ஸ் தெரிவித்தார்.
திட்டத்தின் வளர்ச்சியுடன் அதன் பரவலும் அதிகரிக்கிறது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட Connections Through Culture திட்டம், ஐரோப்பா மற்றும் தெற்காசியாவிலிருந்து உதவித்தொகை பெறுநர்களை வரவேற்கிறது. 2025ஆம் ஆண்டில் முதன் முறையாக இந்தத் திட்டத்துடன் நேபாளம் இணைகிறது. இந்த விரிவாக்கம், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான கலைஞர்கள் ஐக்கிய இராச்சியத்துடன் இணையவும் அறிவைப் பரிமாறிக்கொள்ளவும் கலாச்சார பன்முகத்தன்மையை கொண்டாடும் மற்றும் பகிரப்பட்ட எதிர்காலங்களை ஆராயும் திட்டங்களை இணைந்து உருவாக்கவும் உதவுகிறது.
Connections Through Culture ஐ மிகவும் சிறப்பானதாக்குவது அதன் ஒன்றிணைக்கும் பன்முகத்தன்மை தான். வெவ்வேறுபட்ட மரபுகள், கருத்துக்கள் மற்றும் கலை நடைமுறைகள் ஒன்றிணைந்து புதிதாக ஒன்றை உருவாக்குகின்றன. என பிரிட்டிஷ் கவுன்சிலின் கலைப் பணிப்பாளர் ரூத் மெகன்சி CBE கூறினார். மேலும் அவர் இத் திட்டம் அதன் விரிவாக்கத்துடன் இன்னும் அதிகமானோரையும் சமூகங்களையும் இணைத்து, எல்லைகளைக் கடந்து, அமைதி, நம்பிக்கை மற்றும் செழுமையை வளர்ப்பதில் கலைகளின் பங்கை வலுப்படுத்துகிறது. என்றார்.
இவ் வருடம் உதவித்தொகை பெறுபவர்கள் இடர்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும், பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ளவும், எல்லைகளை கடந்த படைப்புக்களை உருவாக்கவும் பிரிட்டிஷ் கவுன்சில் உலகளவில் GBP 1,200,000 இற்கும் அதிகமான நிதியுதவியை வழங்கும்.
ஐக்கிய இராச்சியம் - இலங்கை கூட்டுத் திட்டங்கள் பற்றிய மேலதிக தகவலுக்கு,
https://www.britishcouncil.lk/programmes/arts/connections-through-culture-grantee-2025ஐப் பார்வையிடவும்.
Connections Through Culture Grants பற்றி
Connections Through Culture Grants திட்டம், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆசிய-பசுபிக் மற்றும் ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கு இடையே புதிய கலாச்சார இணைவுகளை வளர்ப்பதை நோக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகைகள் வளர்ச்சியின் எந்த கட்டத்திலுமுள்ள கலைஞர்கள் மற்றும் கலாச்சார அமைப்புகளின் புதிய கருத்துக்கள் மற்றும் இணைவுகளை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உதவித்தொகைகள் புதிய தொடர்புகள், பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புக்களை ஆதரிக்கின்றன.
பிரிட்டிஷ் கவுன்சில் பற்றி
பிரிட்டிஷ் கவுன்சில் என்பது ஐக்கிய இராச்சியத்தின் கலாச்சார உறவுகள் மற்றும் கல்வி வாய்ப்புகளுக்கான சர்வதேச அமைப்பாகும். கலை மற்றும் கலாசாரம், கல்வி மற்றும் ஆங்கில மொழி மூலம் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஏனைய நாடுகளின் மக்களிடையே இணைப்பை ஏற்படுத்தி, புரிதல் மற்றும் நம்பிக்கையை உருவாக்குவதன் ஊடாக அமைதியான வளமான எதிர்காலத்தை ஆதரிக்கிறோம். நாங்கள் 200இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள மக்களுடன் இணைந்து பணியாற்றுவதுடன் நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ளோம்.
மேலதிக தகவல்களுக்கு: www.britishcouncil.orgஐப் பார்வையிடவும்.
For media inquiries, please contact:
Surani Perera
Communications Manager
British Council Sri Lanka
surani.perera1@britishcouncil.org
076-259-9748

